ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என 'கமாண்டர்' நடிகரை அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். 'ராசி' பெயர் கொண்ட தனது அடுத்த படத்தில் 'சிறைக்காப்பாளர்' படத்தை விடவும் அதிக வசூலைப் பெற்றாக வேண்டும் என்று தனது படைத் தொண்டர்களிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தாராம். 'சிறைக்காப்பாளர்' இசை வெளியீட்டு விழாவில் அதன் நடிகர் பேசிய பேச்சுக்கள் 'கமாண்டர்' நடிகரை கோபம் கொள்ள வைத்துள்ளதாம். தன்னையும் தனது ரசிகர்களையும் வேண்டுமென்றே இழிவு படுத்தியதாக அவர் நினைக்கிறாராம்.
இந்த சூழலில் தனது 'ராசி' படத்தின் இயக்குனர் 'சிறைக்காப்பாளர்' பட நாயகனுடன் படம் இயக்கும் அறிவிப்பு வந்ததும் 'கமாண்டர்' நடிகரை கோபம் கொள்ள வைத்துள்ளதாம். அதனால் தனது 'ராசி' பட இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேச முடியாது என்பதும் ஒரு காரணம். அந்த இயக்குனரை பக்கத்தில் வைத்துக் கொண்டே விமர்சிக்க முடியாது. எனவேதான் விழாவை ரத்து செய்யச் சொல்லிவிட்டாராம். இது ஒரு புறமிருக்க குடும்ப விவகாரம் ஒன்றும் விழாவை ரத்து செய்ய வைக்கக் காரணமாக இருந்தது என்கிறார்கள்.
சமீபத்தில் மூன்று எழுத்து நடிகையுடன் வெளிநாடு சுற்றுலா எல்லாம் சென்றுவந்தார் 'கமாண்டர்' நடிகர் என்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. அதனால், 'கமாண்டர்' குடும்பத்தினர் கடும் கோபத்தில் உள்ளார்களாம். கமாண்டரும் அவரது குடும்பத்தினரும் பிரிந்தே இருக்கிறார்கள். அதன் காரணமாக கமாண்டரின் மனைவி விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பேயில்லை. அடுத்து அரசியல் என்று காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் மனைவி விழாவுக்கு வராமல் போனால் அது அவரது இமேஜை மேலும் பாதிக்கும் என கடைசி நேரத்தில் யாரோ ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். அடுத்து திரைப்பட இயக்குனராக களமிறங்க உள்ள வாரிசும் விழாவுக்கு வராமல் போனால் அதுவும் சர்ச்சையைக் கிளப்பும். இப்படி பல விஷயங்கள் பின்னணியில் இருப்பதை மறைக்க, அரசியல் அழுத்தம்தான் காரணம் என பரப்பச் சொல்லி அதன்படி நடந்து வருகிறதாம்.
விரைவில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து 'கமாண்டர்' நடிகருக்கு கடும் எச்சரிக்கை பறக்கும் என்கிறது அரசியல் வட்டாரம்.