சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் மகன் நடிகர் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடி சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் காதலிப்பதாக தற்போது புது கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.
'ஸ்போட்டிபை' என்ற மியூசிக் ஆப் ஒன்றில் 'ப்ளூமூன்' என்ற ஒரு கணக்கில் அனுபமா, துருவ் விக்ரம் இருவரும் ஒருவருக்கொருவர் உதட்டுடோடு உதடு வைத்து முத்தமிடும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அந்த புகைப்படம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள்ளாக பலர் அதை கவனித்துவிட்டனர்.
இருவரும் காதலிக்கிறார்களா அல்லது 'பைசன்' படத்திற்காக இப்படி ஒரு புரமோஷன் செய்துள்ளார்களா என்ற சந்தேகமும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது புரமோஷனாக இல்லை என்றால் 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.