
நாயகியை டிரோல் செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்?
அதேசமயம், அவரிடமிருந்து விலகிச் செல்லும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் "டிரோல்" செய்வதற்கும் மற்ற செய்தித் தளங்களில் செய்திகளை வரவழைக்கவும் ஆட்களை செட் செய்து வைத்துள்ளாராம். அதனால், அவர்களுக்கு புதிதாக நல்ல வாய்ப்புகள் கிடைக்காதபடி பார்த்துக் கொள்கிறாராம். இதுதான் அந்த மேனேஜர் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக வந்த செய்தி.
தழிழில் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களில் நடித்த ஒரு நாயகி, அந்த மேனேஜர் வேண்டாமென விலகியுள்ளார். வெற்றிப் படங்களில் நடித்த பின்பும், அவர் தன்னை விட்டு விலகியதால் புதிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்காதபடி செய்துவிட்டாராம். இப்படித்தான் இதற்கு முன்பும் ஒரு மேனேஜர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது அவர் கைவசம் ஒரு நடிகை கூட இல்லை, நடிகர் கூட இல்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ள நடிகர் தனது மேனேஜர் குறித்து தெரிந்து வைத்துள்ளாரா இல்லையா என்றும் கோலிவுட்டில் கேள்வி கேட்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!