Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் முகத்தில் விழுந்த பளார் அறை : பிரகாஷ்ராஜ் புலம்பல்

24 மே, 2019 - 10:49 IST
எழுத்தின் அளவு:
A-Solid-Slap-on-my-face-says-Prakash-Raj

இந்தியா முழுவதும் அறியப்பட்ட வில்லன் மற்றும் குணசித்ர நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ் படங்களில் அறிமுகமாகி அதிகம் நடித்தாலும் கன்னடத்துக்காரர். அவரது தோழியும் பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு தீவிரமான அரசியல் கருத்துக்களை பேச ஆரம்பித்தார். குறிப்பாக ஆளும் பா.ஜ.க.,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதன் உச்சகட்டமாக நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

இதனால் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலும் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால் நேற்று தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அஸ்வத் வெற்றி பெற்றார், பா.ஜ.க வேட்பாளர் எம்.சி.மோகன் இரண்டாம் இடம் பிடித்தார். பிரகாஷ்ராஜுக்கு 3வது இடம் கிடைத்தது.

இந்த தோல்வியால் விரக்தி அடைந்த பிரகாஷ்ராஜ், தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: இது என் முகத்தில் பளார் என்று விழுந்த அறை. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலி கிண்டல்கள், என்மேல் வைக்கப்படும். ஆனால் நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் இனியும் தொடரும் என்று எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
என்ஜிகே-விற்கு யு சான்றுஎன்ஜிகே-விற்கு யு சான்று ஆந்திர அமைச்சராகிறார் ரோஜா.? ஆந்திர அமைச்சராகிறார் ரோஜா.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
25 மே, 2019 - 06:38 Report Abuse
Dr.C.S.Rangarajan மதசார்பின்மை தனிப்பட்ட மனிதனுக்கு என ஏற்படுத்தப்பட்டதா, அல்லது மத்திய, மாநில அரசுகளும்,அரசில் தொடர்புடைய அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டியதா? தனிமனிதன் மதசார்புடையவன்தான். ஜனதா தளம் (செகுலர்) தலைவர் தேவா கவுடா சுற்றாத கோயில்கள் இல்லையே. அரசின் கொள்கைதான் மதசார்பின்மை.
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
24 மே, 2019 - 16:38 Report Abuse
கதிரழகன், SSLC பின்ன சும்மாவா காசு வருது இங்கிலாந்து அமெரிக்கா எல்லா எடத்துலேந்தும் மதமாற்ற மானியம் வருது. சினிமா மார்க்கெட் புட்டுக்கிச்சு. அத வெச்சு வண்டி ஓட்டணுமில்ல?
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 மே, 2019 - 16:34 Report Abuse
 nicolethomson உனக்கெல்லாம் ????
Rate this:
Girija - Chennai,இந்தியா
24 மே, 2019 - 15:13 Report Abuse
Girija இங்கு வந்தால் அந்த இன்னொரு செருப்பை பிற மாநில இளைஞர்களின் வேலை வாய்ப்பை தட்டி பறித்த தமிழர்கள் தருவார்கள்.
Rate this:
Being Justice - chennai ,இந்தியா
24 மே, 2019 - 15:05 Report Abuse
Being Justice இதெல்லாம் சாதாரணமப்பா. ஆலமரமே சாஞ்சிடுச்சு இதுக்கெல்லாம் போயி வருத்தப்படலாமா.
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in