Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

15 மே, 2019 - 07:49 IST
எழுத்தின் அளவு:
Nadigar-Sangam-Election-:-Retired-judge-appointed

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. 2015-18ம் ஆண்டுக்கான தேர்தலில் நாசர், விஷால், பொன்வண்ணன் மற்றும் கார்த்தி தலைமையிலான நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் நிறைவடைந்தது.

இதையடுத்து, தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. ஆனால், நடிகர் சங்க கட்டட பணிகளை காரணம் காட்டி, தேர்தலை 6 மாதம் தள்ளிவைத்தனர். தற்போது அதுவும் முடிந்த நிலையில் கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் தேர்தல் நடக்கும் என நாசர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று இரவு தனியார் ஓட்டலில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட தேர்தல், கட்டட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாசர், "கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அவர் அறிவிப்பார். எங்கள் அணி மீண்டும் களம் இறங்குகிறது" என்றார்.

கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், குட்டி பத்மினி, லலிதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முன்னணிக்கு வர முடியவில்லை ஏன்?: விசித்ராமுன்னணிக்கு வர முடியவில்லை ஏன்?: ... பிரச்சனை தீர்ந்தது : களவாணி 2 விரைவில் ரிலீஸ் பிரச்சனை தீர்ந்தது : களவாணி 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in