Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்தை சீரழித்த போலீஸ் : தாடி பாலாஜி குமுறல்

05 மார், 2019 - 14:08 IST
எழுத்தின் அளவு:
Thadi-Balaji-slams-Police-SI

என் குடும்பத்தை சீரழித்த, எஸ்.ஐ., மனோஜ் குமார் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, காமெடி நடிகர், தாடி பாலாஜி வலியுறுத்தினார்.

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் தாடி பாலாஜி, 45. காமெடி நடிகரான இவர், முதல் மனைவியை விவாகரத்து செய்தவர். இவரும், நடன கலைஞரான, நித்யா, 32 என்பவரும் காதலித்து, 2009ல், திருமணம் செய்தனர். போஷிகா, 7 என்ற, மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும், 2017ல் பிரிந்து விட்டனர். போஷிகா, தாயுடன் உள்ளார்.

இந்நிலையில், அதே ஆண்டில், மாதவரம் காவல் நிலையத்தில், நித்யா புகார் செய்தார். அதில், கணவர் பாலாஜி, ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறார். குடிபோதையில், அடித்து சித்ரவதை செய்கிறார் என, கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாலாஜியும் புகார் அளித்தார்.

அதில், தன் மனைவிக்கும், உடற்பயிற்சியாளர் பசில் என்பவருக்கும் தகாத உறவு உள்ளது. அதனால், உதவி கேட்டு, குடும்ப நண்பரான, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணியாற்றிய, மனோஜ்குமாரை நாடினேன். அவரும், என் மனைவியுடன் சேர்ந்து, மிரட்டல் விடுக்கிறார் என, கூறியிருந்தார்.

இருவரது புகார் குறித்தும், வில்லிவாக்கம் மகளிர் போலீசார் விசாரித்து, சமரசம் செய்து வைத்தனர். அதன்பின், டிவி சேனல் நடத்திய, பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில், பாலாஜியும், நித்யாவும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பின், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், பிப்., 27ல், சென்னையில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாலாஜி, நானும், என் மனைவியும் பிரிந்து தான் வாழ்கிறோம். என் மனைவி விஷயத்தில் தலையிடக் கூடாது என, எஸ்.ஐ., மனோஜ் குமார் கொலை மிரட்டல் விடுக்கிறார். அவரும், அவரை சேர்ந்த சிலரும், என் குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர் என, கூறியிருந்தார்.

இந்நிலையில், எஸ்.ஐ., மனோஜ்குமார் மீது கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், உதவி கமிஷனர் முன், பாலாஜி ஆஜராகி, நேற்று விளக்கம் அளித்தார்.

அதற்கு முன், அவர் அளித்த பேட்டி: எஸ்.ஐ., மனோஜ்குமார், நண்பர் போல பழகி, துரோகம் செய்து விட்டார். அவருக்கும், என் மனைவிக்கும் இருக்கும் உறவு பற்றி, வெளியில் சொல்ல விரும்பவில்லை. நடவடிக்கை எனக்கு, என் குழந்தையின் எதிர்காலம் முக்கியம். தற்போது கூட, மகளின் படிப்பிற்கு, 65 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளேன். என் மனைவி சார்ந்துள்ள, பெண்கள் அமைப்பினரும் மிரட்டுகின்றனர். என் மனைவி, விவாகரத்து கோரியுள்ளார். அவரை மன்னித்து, ஏற்க தயராக உள்ளேன். மனோஜ் குமார், திருச்சிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அறிகிறேன். என் குடும்பத்தை சீரழித்த, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, பாலாஜி கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 வேண்டாம், 10 போதும்: சிருஷ்டி டாங்கே100 வேண்டாம், 10 போதும்: சிருஷ்டி டாங்கே பாரதி முழக்கமிடும் பிரபுதேவாவின் மகன்கள் பாரதி முழக்கமிடும் பிரபுதேவாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in