Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தி எடுத்த புதிய முடிவு

05 பிப், 2019 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Karthis-new-decision

ஆரம்பம் முதலே கே.இ.ஞானவேல் ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்து வந்த கார்த்தி, தற்போது அவருக்கு கால்ஷீட் கொடுப்பதில்லை. அவரது அம்மாவின் தங்கை மகனான எஸ்.ஆர்.பிரபுவுக்கு மட்டும் தான் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார் கார்த்தி.

இந்நிலையில் தான் 'பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் லக்ஷ்மண் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் தேவ் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள 'தேவ்' படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

ஏற்கனவே சிங்கம்-2 படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண், கார்த்தியின் பள்ளித்தோழர். பழைய தயாரிப்பாளர் லேனா செட்டியாருடைய பேரன். இப்படத்தின் சாட்லைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை முன்னணி டிவி நிறுவனம் பெரியவிலை கொடுத்து வாங்கியுள்ளது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமைகள் மட்டுமே விலை போகின்றன. அந்த அடிப்படையில் இப்போது காத்தியின் 'தேவ்' படத்தையும் வாங்கியிருக்கிறது.

தேவ் படத்தை தயாரித்த லஷ்மனுக்கு இப்போது லாபம் கிடைத்துள்ளதாம். இனி தொடர்ந்து லஷ்மனுக்கு கால்ஷீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் கார்த்தி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மாநாடு எப்போது டேக் ஆப் ஆகும்.? - ரசிகர்கள் ஏக்கம்மாநாடு எப்போது டேக் ஆப் ஆகும்.? - ... அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒரேநாளில் ஒழிக்கலாம் : விஷால் அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sam - Bangalore,இந்தியா
07 பிப், 2019 - 09:17 Report Abuse
sam Why can't you come and act in Tamil movie? Have you seen "Theeran Adhigaaram Ondru" movie?
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06 பிப், 2019 - 04:07 Report Abuse
J.V. Iyer கார்த்தி நடிப்பதை விட்டுவிட்டு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஆகலாம். இவர் நடிப்பதை காண சகிக்கவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in