Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தன் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி : புகார் அளித்த நடிகை

18 ஜூலை, 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Actress-Beena-Antony-files-complaint-using-her-photo-in-online-money

சமீப நாட்களாக பல இணையதள பக்கங்களில் நடுத்தர வயது இல்லத்தரசிகள் சிலரின் புகைப்படத்தை வெளியிட்டு வீட்டில் இருந்தபடியே மாதம் இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் இந்த அம்மா என அதில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு இணையதளத்தில் தன்னுடைய அனுமதியின்றி தன் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலையாள நடிகை பீனா ஆண்டனி என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்..

மலையாளத்தில் சின்ன சின்ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பீனா ஆண்டனியின் புகைப்படத்தை அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அவரது பெயர் ஆபா கர்ப்பால் என்றும், அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு, இவர் மாதம் தோறும் 6.5 லட்சம் ரூபாய் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கிறார் என விளம்பரப்படுத்தி உள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த விளம்பரத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பின்னர் இது எவ்வளவு பெரிய மோசடியான செயல் என்பதன் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக சைபர் க்ரைம் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார் பீனா ஆண்டனி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்க புது கட்டடத்தை திறந்து வைத்த மோகன்லால் - மம்முட்டிதயாரிப்பாளர் சங்க புது கட்டடத்தை ... ஒரே நேரத்தில் அரசியலில் குதித்த 5 நடிகைகள் ஒரே நேரத்தில் அரசியலில் குதித்த 5 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19 ஜூலை, 2019 - 16:12 Report Abuse
Nallavan Nallavan மலையாளி இவள் ..... விளம்பரத்துக்கு காசை பிளாக் கா வாங்கியிருப்பா .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in