Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

என்ன ஆச்சு... - நடிகை காவேரியா இது...?

25 மார், 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
What-happend-to-Actress-Kaveri.?

1990ம் ஆண்டு பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் காவேரி. அதன்பிறகு உன்னை நான் வாழ்த்துகிறேன், போக்கிரி தம்பி, நல்லதே நடக்கும், சேதுபதி ஐ.பி.எஸ் உள்பட சில படங்களில் நடித்தார்.

அவர் எதிர்பார்த்த அளவிற்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சூர்யா, காவேரி, தங்கம், மீரா, கொடி முல்லை, வம்சம் உள்பட பல தொடர்களில் நடித்தார். மெட்டி ஒலி தொடரில் அவர் நடித்த தனம் கேரக்டர் அவருக்கு பெரிய புகழை கொடுத்தது. கடந்த 2013ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன்பிறகு சீரியலிலும் நடிக்கவில்லை.

மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்களின் ரீ-யூனியனுக்கு வந்த காவேரியை பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. காவேரி என்றாலே அந்த மொழுமொழு தோற்றம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது உடல் எடை கணிசமாக குறைந்து முகத்தோற்றம் மாறி இருக்கிறார். பலர் அவரை காவேரி என்றே நம்பவில்லை.

திருமணத்திற்கு பிறகு காவேரிக்கு உடல் எடை தானாகவே குறைய ஆரம்பித்திருக்கிறது. மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்களும் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

"மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் காவேரி.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் மவுனிகா10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ... யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக் யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
28 மார், 2019 - 19:15 Report Abuse
Rahim Gani பிரசாந்த் காவேரி ஜோடி பரபரப்பாக பேசப்பட்டது அதே போலத்தான் விஜய் சங்கவி ஜோடியும் ஆனால் இந்த இரண்டு ஹீரோக்களின் பண பலம் பொருந்திய தந்தையர்கள் எங்கே தங்கள் மகன்கள் காதலில் விழுந்து துட்டு சம்பாதிப்பது நின்று விடுமோ என நினைத்து தயரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தங்கள் பவரை காட்டி இந்த இரண்டு நடிகைகளுக்கும் எந்த வாய்ப்பும் கொடுக்க கூடாதென ஓரம் கட்ட வைத்தார்கள் , நடிகர் சங்கமும் இந்த இரண்டு பணக்கார அப்பாக்களை எதிர்க்க முடியவில்லை ,பாவம் நடிப்பு திறன் இருந்தும் திரைத்துறையின் ஆதரவு இல்லாததால் ஹீரோக்களின் பணக்கார தந்தையர்களால் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் இவர்கள்....
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
26 மார், 2019 - 15:35 Report Abuse
raghavan கொஞ்சமாவது நியாயமா இருக்கா? முதல் படம் வந்து முப்பது வருடங்கள் ஆகியது தெரிகிறது. அப்போது வெறும் பதினெட்டு வயது என்றால் கூட இப்போது வயது நாற்பத்தெட்டு ஆகிறது. பாட்டி வயது நெருங்கும்போது எப்படி அப்படியே இருக்க முடியும்?
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26 மார், 2019 - 14:31 Report Abuse
Nallavan Nallavan மாற்றம் ஒன்றே மாறாதது .....
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
26 மார், 2019 - 09:17 Report Abuse
Bhaskaran ஏதேனும் சர்க்கரை வியாதி உள்ளவராக இருப்பார்
Rate this:
taxiphone0@gmail.com - paris,பிரான்ஸ்
25 மார், 2019 - 18:59 Report Abuse
taxiphone0@gmail.com o beauty
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in