Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்!

26 ஏப், 2024 - 04:43 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-saluted-at-the-memorial-of-soldier-Mukund-Varadarajan!


ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சார்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி அமரன் பட குழுவினர் சல்யூட்டிங் மேஜர் முகுந்த் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அதோடு சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்துள்ள ராணுவ உடை அணிந்த கெட்டப்புடன் மேஜர் முகுந்தனின் நினைவு இடத்துக்கு சென்று சல்யூட் அடித்தபடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

அது குறித்த ஒரு புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, நமது தேசியக்கொடி காற்று அசைவதால் பறப்பதில்லை. அதனை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் இறுதி மூச்சில்தான் பறக்கிறது என்று பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி?சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! விஜய்யின் கடைசி படத்தில் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)