மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு | நான் விஜய்யின் ரசிகை! - நடிகை குஷ்பு | சிவாஜி பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன் ! - சிவகார்த்திகேயன் | 'பார்க்கிங்' இயக்குனர் அடுத்த படம் குறித்து தகவல் இதோ! | மாளவிகா மோகனனின் தெலுங்கு அறிமுகம் தள்ளிப்போக காரணமாக இருந்த விஜய் தேவரகொண்டா! | 'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்? | 'ஜனநாயகன்' தணிக்கை தாமதம்: வழக்கு நாளை ஒத்திவைப்பு | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் |

தற்போது 'கோட்' படத்தில் நடித்து வரும் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் அவரது கடைசி படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.
அதோடு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்களாம். இதற்கு முன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்த சமந்தாவும், பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்த கீர்த்தி சுரேசும் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.