கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
என்னதான் விஜய்யும், அஜித்தும் தங்களை நெருக்கமான நண்பர்களாக காட்டிக் கொண்டாலும் அவரது ரசிகர்கள் இப்போதும் எலியும், பூனையுமாகத்தான் இருக்கிறார்கள். இதனை தயாரிப்பாளர்கள் வியாபார யுக்திக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது ரீ ரிலீஸ் டிரண்டிங்கிலும் தொடர்கிறது.
சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 'கில்லி' படம் 12 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது 'பில்லா' படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அஜித்தின் பிறந்த நாளான மே முதல் தேதியில் தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். ஏடிஎம் புரொடக்ஷன் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.
1980ம் ஆண்டு ரஜினி, ஸ்ரீப்ரியா நடித்த 'பில்லா' படம், 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் ரீமேக் ஆனது. இதில் நயன்தாரா, நமீதா நடித்திருந்தார்கள். விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெற்றது. தற்போது ரீ ரிலீஸில் கில்லி சாதனையை முறியடிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் மே 1ல் மங்காத்தாவும் வெளியாகலாம் என தெரிகிறது. ஒரேநாளில் இரண்டு அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகுமா... அல்லது வேறு தேதியில் மங்காத்தா வெளியாகுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.