பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 23ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்கு அஜித்தின் ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பு கொடுத்தார்கள். அதனால் திரைக்கு வந்த நான்கு நாட்களில் உலக அளவில் இந்த படம் 17.5 கோடி வசூலித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 16 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அந்த வகையில் இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் நான்கு நாள் வசூலில், மங்காத்தா முதலிடம் பிடித்திருக்கிறது. தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் அனைத்து ரீரிலீஸ் படங்களின் வசூல் சாதனைகளையும் இந்த படம் முறியடித்து முதலிடம் பிடிக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.