Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை டூ ஓவியக் கலைஞர்: ஷாம்லியின் தனித்துவ வளர்ச்சி

19 பிப், 2026 - 12:32 IST
எழுத்தின் அளவு:
She-starred-in-Mani-Ratnam-film-at-four,-won-National-Award.-Today,-Mohanlals-former-co-star-stays-out-of-limelight
Advertisement


நடிகை ஷாலினியின் தங்கையான ஷாம்லி, குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தன் 4ம் வயதில் குழந்தை நட்சத்திரமாக மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார். அடுத்து 'மல்லூட்டி' என்னும் மலையாளத் திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்ட குழந்தையாக நடித்தார். இதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரளா மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.

'துர்கா' படத்திலும் குழந்தையாக நடித்து பிரபலமானாவர். மலையாளத்தில் பிரபல நடிகர்களான மோகன்லால், மம்முட்டி படங்களிலும் நடித்திருக்கிறார். 2009ல் 'ஓய்' எனும் தெலுங்குத் திரைப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து கதாநாயகியாக முதல் முறையாக நடித்தார். அதன்பிறகு 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் சிங்கப்பூருக்கு படிப்புக்காக சென்ற ஷாம்லி, படிப்பு முடித்து, தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து 'வீர சிவாஜி' என்னும் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், தனது திரைக்கனவை ஒதுக்கி வைத்துவிட்டு ஓவியக் கலைப்பிரிவை தனக்கான விருப்ப பாதையாக தேர்ந்தெடுத்தார் ஷாம்லி.

சிங்கப்பூரில் உள்ள லசாலீ கலைக் கல்லூரியில் விஷூவல் கம்யூனிக்கேஷன் மற்றும் திரைப்பட கல்வியில் பட்டம் பெற்றிருந்த ஷாம்லி, பிரான்சில் உள்ள பாரிஸ் கலைக் கல்லூரியில் பயற்சியையும் முடித்தார். சிங்கப்பூரில் படிக்கும்போது சீன இன்க் நுட்பங்களை பயன்படுத்தும் கலை மற்றும் கண்ணாடியில் ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவராக மாறினார்.

தன்னை மேம்படுத்திக்கொண்ட ஷாம்லி, தற்போது ஒரு தொழில்முறை கண்காட்சி கலைஞராக முன்னேறியுள்ளார். 2023ம் ஆண்டில், சென்னையில் உள்ள போகஸ் ஆர்ட் கேலரியில் 'ஷி' (SHE) என்ற தனி கண்காட்சியை நடத்தினார். உலக வர்த்தக மையத்தில் நடந்த உலக கலை துபாயில் பங்கேற்றார். மேலும் பவர் பைனரி காட்சிப்படுத்தலின் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தினார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருதையும் வென்று, இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக மாறி, படிப்படியாக தனது திறமையை வளர்த்து, சிறந்த ஓவிய படைப்பாளராக மாறியுள்ளார் ஷாம்லி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கெணத்த காணோம் : வடிவேலு காமெடி டயலாக்கில் யோகிபாபு படத் தலைப்புகெணத்த காணோம் : வடிவேலு காமெடி ... டாக்சிக்  டீசர் நாளை வெளியாகிறது டாக்சிக் டீசர் நாளை வெளியாகிறது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap