பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

நிலா காலம், செல்லமே, ஆனந்த தாண்டவம் படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா, 17 வருடங்களுக்கு பிறகு தற்போது 'பிரேக்பாஸ்ட்' என்ற படத்தை இயக்குகிறார். 'செல்லமே' படத்தின் மூலம் விஷாலை அறிமுகப்படுத்தியவர் இந்த படத்தில் பிக்பாஸ் வசந்த் ராவணன், ரோஸ்லின், கீர்த்தி மோகன், அமிதா என 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கிரிதா வரதராஜ் தயாரிக்கிறார்.
படம் குறித்து காந்தி கிருஷ்ணா கூறியிருப்பதாவது: இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை இந்த படம் பேசுகிறது. உறவுகளின் அற்புதத்தை பேசுகிறது. இப்போதெல்லாம் குடும்பங்களில் அமைதி இல்லை. அமைதியை வெளியில் தேட வேண்டியது இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்குமான மன இடைவெளி அதிகமாகி இருக்கிறது. இது ஏன் என்பதை படம் சொல்லும்.
இந்த படத்தில் 4 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். புதுமுங்கள் என்றால் அவர்களை உழைப்பை முழுமையாக பெற முடியும், இமேஜ் பற்றிய கவலையும் இல்லை. இது சிறிய பட்ஜெட் படம் அல்ல. பாடல் காட்சிகளை கஜகஸ்தான், குலுமணாலி, மலேசியாவில் படமாக்கி உள்ளோம். என்கிறார்.