மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக கடந்த வாரம் ஒரு சர்ச்சை எழுந்தது. அதன்பின் தயாரிப்பாளர்கள் படத்தை தியேட்டர்களில் வெளியிடத்தான் விரும்புகிறோம், தியேட்டர்காரர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் 'மாஸ்டர்' தயாரிப்பாளருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தற்போதுள்ள 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் 'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் 'மாஸ்டர்' படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்களிடம் தயாரிப்பாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
அதற்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பிலும் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 'மாஸ்டர்' படம் மூலம்தான் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்க முடியும் என அவர்கள் பெரிதாக நம்புகிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட்ட காரணத்தால் சுமார் 100 படங்கள் வரை வெளிவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தப் படங்களுக்கு எல் லாம் முன்னுரிமை தராமல் 'மாஸ்டர்' படத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வெளியிட்டால் அந்த 100 படங்களின் தயாரிப்பாளர்களும் பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது.
'மாஸ்டர்' தயாரிப்பாளருக்காவது படத்தின் வியாபாரம் நடந்துவிடும். ஆனால், அந்த 100 படங்களுக்கும் வியாபாரம் நடப்பது சாதாரண விஷயமல்ல. அவர்களும் கடுமையான சூழலில்தான் இருப்பார்கள்.
'மாஸ்டர்' படத்திற்கு மட்டும் இப்படி ஏகபோகமாக தியேட்டர் வெளியீட்டை வழங்குவது சரியானதல்ல என்று கோலிவுட்டிலும் எதிர்ப்புக்குரல் எழும்ப ஆரம்பித்துள்ளது.