Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள நடிகை சரண்யா ஆனந்த் திருமணம்: காதலரை மணக்கிறார்

17 அக், 2020 - 12:05 IST
எழுத்தின் அளவு:
Wedding-bell-for-Saranya-Anand

ஆடை வடிவமைப்பாளர், நடன இயக்குனர் மற்றும் மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் சரண்யா ஆனந்த். மோகன்லாலின் 1971 பியண்ட் பார்டர்ஸ் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். அதன் பிறகு சங்க்ஸ், மாமங்கம், ஆகாஷகங்கா 2, அச்சாயன்ஸ் மற்றும் கப்புசினோ படங்களில் நடித்தார். சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.

தற்போது சரண்யா ஆனந்த் தனது நீண்ட நாள் காதலர் மனேஷ் ராஜன் நாயரை திருமணம் செய்ய இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டிலிருந்து சில படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த சரண்யா, நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது: கடவுளின் கிருபையினாலும் ஆசீர்வாதத்தினாலும் இறுதியாக நான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருப்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது காதலர் ராஜாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் அவர் என்னை தன் ராணியாக்கி கொண்டார். என் மனதையும் திருடிவிட்டார். இறுதியாக என் வாழ்நாள் முழுவதும் நான் தொந்தரவு செய்ய விரும்பும் எனது சிறப்பு நண்பரை பெற்று விட்டேன். எங்கள் வாழ்க்கையின் அடுத்த அழகான கட்டத்திற்காக எங்களுக்காக பிரார்த்தியுங்கள். என்று எழுதி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீனியர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல்சீனியர்கள் கூட்டணியில் உருவாகும் ... நடிகை தாக்கப்பட்ட வழக்கு : வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற கோரிக்கை நடிகை தாக்கப்பட்ட வழக்கு : வேறு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Muruga Vel - Mumbai,இந்தியா
18 அக், 2020 - 12:13 Report Abuse
 Muruga Vel கடவுள் கிருபை ஆசிர்வாதம்ன்னு சொன்னா அம்மணி ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in