Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

8 கோடி வசூலித்ததா க.பெ.ரணசிங்கம் ?

07 அக், 2020 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Did-Ka-pae-ranasingam-collected-Rs.8-crore?

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க விருமாண்டி இயக்கிய க.பெ.ரணசிங்கம் படம் கடந்த வாரம் டிஜிட்டல் தளங்களில் வெளியானது. டிடிஎச், மொபைல் ஆப் ஆகியவற்றில் வெளியான இப்படத்தை இதுவரையிலும் சுமார் 4 லட்சத்திற்கு கூடுதலானவர்கள் பார்த்துள்ளார்களாம்.

ஒரு முறை பார்க்கக் கட்டணம் 199 ரூபாய் என்பதால் 8 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது என சமூக வலைத்தளங்களிலி செய்தி பரவியுள்ளது. இது இப்படத்தைப் பொறுத்தவரையில் சிறந்த வசூல்தான். டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளரும், டிஜிட்டலில் வெளியிட்டவர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.

8 கோடி ரூபாயில் பாதிக்குப் பாதி என்றால் கூட தயாரிப்பாளருக்கு 4 கோடி கிடைக்கும். மேலும், சாட்டிலைட் உரிமை, பின்னர் கட்டணமில்லா ஓடிடி வெளியீடு உரிமை ஆகியவற்றில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை எடுத்துவிடுவார் என்கிறார்கள்.

தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்று காத்திருப்பதை விடுத்து இப்படி படத்தை வெளியிட்டு தன்னுடைய முதலீட்டை தயாரிப்பாளர் காப்பாற்றிக் கொண்டதாக திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.

இந்த கணக்கில் 'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால், அதைக் குறைந்தபட்சம் 1 கோடி பேர் பாத்தால் கூட 200 கோடி வசூலாகிவிடும்.

க.பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் ஒரு புதிய வெளியீட்டு முறையை திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். படம் நன்றாக இருக்கும்பட்சத்தில் அது லாபத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை என்றே சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியைக் கிண்டலடிக்கிறாரா ராம்கோபால் வர்மா ?ரஜினியைக் கிண்டலடிக்கிறாரா ... எஸ்பிபி-க்கு 'பாரத ரத்னா' வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை எஸ்பிபி-க்கு 'பாரத ரத்னா' வழங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in