Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரட்டை ரோஜா - ஷிவானிக்கு பதில் சாந்தினி

23 ஜூலை, 2020 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Rettai-Roja-:-Chandini-in-Shivani-place

பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் ஷிவானி. கடைசியாக இரட்டைரோஜா தொடரில் நடித்து வந்தார். இதில் இவர் இரட்டை சகோதரிகளாக இரண்டு வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இரட்டைரோஜா தொடரில் இருந்து ஷிவானி விலகி இருக்கிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு வந்திருக்கிறது என்றும், கொரோனா காலம் முடியும் வரை நடிக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுக்கிறார்கள் என்றும் இரண்டு வித காரணங்கள் கூறப்படுகிறது.

தற்போது ஷிவானி நடித்த இரட்டை சகோதரிகள் கேரக்டரில் திரைப்பட நடிகை சாந்தினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சாந்தினி கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்பு குறைந்ததால் சீரியலுக்கு வந்து தாழம்பூ தொடரில் நடித்தார். தற்போது இரட்டை ரோஜாவில் நடிக்க இருக்கிறார்.

இரட்டை ரோஜா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படவில்லை. விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இதில் அக்ஷய் கமல் ஹீரோவாக நடிக்கிறார். பூவிலங்கு மோகன், சபீதா ஆனந்த், எல்.ராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜீ தமிழ் ஒளிபரப்பும் தொடர்களின் புதிய அத்தியாயங்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இரட்டை ரோஜா படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதுகுறித்து சேனல் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்பு மாநாட்டில் பங்கேற்கும் அஞ்சனா கீர்த்திசிம்பு மாநாட்டில் பங்கேற்கும் ... சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..! - மிரட்டும் வாடிவாசல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவுக்கு சர்ப்பிரைஸ் பரிசு..! - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in