Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று பிறந்த நாள் - எம்.எஸ்.விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் ஆனது எப்படி?

24 ஜூன், 2020 - 11:54 IST
எழுத்தின் அளவு:
How-MSV-turn-as-Mellisai-mannar?

தமிழ் சினிமாவை 50 ஆண்டுகள் வரை தன் இசையால் ஆட்சி செய்த எம்.எஸ்.விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். அவருக்கு இன்று பிறந்த நாள். அவர் எப்படி மெல்லிசை மன்னர் ஆனார்? தெரியுமா...

எம்.எஸ்.விஸ்வநாதன் திரை இசைக்கு வருவதவற்கு முன்பு தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்றவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். டி.ஆர்.பாப்பா, சி.ஆர்.சுப்புராமன், ஆதி நாராயணராவ் உள்பட பல இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள். இவர்களின் இசையிலும், பாடலிலும் கர்நாடக சங்கீதத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.

பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கும். ஆனால் எல்லோராலும் அதனை திருப்பி பாட முடியாது. காரணம் சொற்கள் கடினமாக இருக்கும். உரிய ராகத்தோடு பாடாவிட்டால் அது சோக ராகமாகிவிடும். உதாரணத்திற்காக தியாகராஜ பாகவதரின் பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கும். ஆனால் திருப்பி பாடுவது கஷ்டம்.

இந்த நிலையில்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் அதை உடைத்து, எல்லோருக்குமான இசையாக மாறியதுதான் தமிழ் சினிமா இசையின் ஆரம்பம். கர்நாடக சங்கீதத்தையும், ராகத்தையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு அதில் எளிமையான வார்த்தைகளை போட்டு, மக்களுக்கு புரியும் பாடல்களை, அவர்ளால் பாட முடிகிற பாடல்களை தந்தார். கடின இசையை மெல்லிய இசையாக மாற்றியதால் தான். அவர் மெல்லிசை மன்னராக போற்றப்படுகிறார்.

மேலும் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் தினமலர் இணையதளத்தின் சிறப்பு பகுதியான திரைமேதைகள் பகுதியில் உள்ளது. அதன் லிங்க் இதோ.... - https://cinema.dinamalar.com/msv/

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பாட்டு எழுதாத கண்ணதாசன் - பிறந்தநாள் சுவாரஸ்யம்பாட்டு எழுதாத கண்ணதாசன் - பிறந்தநாள் ... நெப்போலியன் நடித்த ஆங்கில படம் வெளிநாட்டில் வெளியானது நெப்போலியன் நடித்த ஆங்கில படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 10:02 Report Abuse
skv srinivasankrishnaveni எம்கேடி பாடல்கள் நன்னாயிர தொடர்ந்து கேக்கவே முடியாதுண்ணுவேன் முக்கால் பாடுவதுபோல இருக்கும் அவருடைய ரசிகர்கள் என்கிட்டே சண்டைக்கு வரலாம் ஆனால் அதுதான் உண்மை அதனாலே மற்றவர்கள் அவ்ளோஹை பிச்சுலே பாட இயலாது TMS தான் பாடுவார் எப்படியும் இவரால் பாடமுடியும் என்பதே உண்மை பி யு சின்னப்பாவும் அப்படியேதான் அவருடய குறல் வேறுவிதம் அந்தக்காலத்துலே பலரின் பாடல்களும் சிறந்தவைகளே தான் அதுலே கலப்படம் இல்லாது இருந்தன சங்கீதம் தெரிஞ்சவாதான் இசை அமைத்தார்கள் என்பதும் 100% உண்மை முறைப்படிக் கற்றவர்களேதான் ரகுமான்/ ராஜா/ குமார் / அனிருத் ETCஎல்லாம் மேற்கத்திய இசையாட்டம்போலத்தான் இருக்கு ரசிக்கவேமுடியலே இப்போது வரும் இசை அமைப்பாளர்களின் பாடல்கள் எல்லாம் சகிக்கலே என்ற விதம் தான் ஒளியும் ஓலியும் வந்தால் எவ்ளோ ஆர்வமா உக்காந்துக் கிட்டோம் இப்போது வரும் சினிமாக்களில் பாடல்கள் வந்தால் ரிமோட் படும் பாடு ஆஹா சூப்பர் மாடர்ன் குழந்தைகளே கூட ரசிக்கமாட்டேன்கிறதுகள் ஆங்கிலமிடியும் லேபாடிக்கும் குழந்தைகள் சுத்தம் நோ மியூசிக் என்று கூவுதுங்க வெஸ்டர்ன் இசை நமக்கெல்லாம் புரியலீங்க அன்றும் இன்றும் என்றும் சுத்தமான கர்நாடக இசையே தெரிஞ்ச என்போன்ற பலரும் சினிமா பாட்டுக்கே கும்பிடுபோடுறோம் ஒருசமயம் நாங்களும் பாடினோம் அதுலே இசை +இனிமை இருந்துது ஆனால் ராகம்போட்டுண்டு நம்மை திட்டுறாப்போல இருக்கு
Rate this:
24 ஜூன், 2020 - 15:57 Report Abuse
ஸாயிப்ரியா எத்தனை புதிய பாடல் வந்தாலும் என்றும் MSV க்கு பிறகுதான். தென்றல் தவழ் சோலை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in