Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படம் கைவிடப்பட்டதா? ஜீத்து ஜோசப் விளக்கம்

19 மே, 2020 - 18:50 IST
எழுத்தின் அளவு:
Did-Mohanlal-movie-dropped?---Jeethu-joseph-clarification

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரிஷ்யம் என்கிற படத்தின் மூலம் இணைந்தனர் மோகன்லாலும், இயக்குனர் ஜீத்து ஜோசப்பும். இந்த நிலையில் தற்போது மீண்டும் மோகன்லால், த்ரிஷாவை வைத்து ராம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜீத்து ஜோசப் இன்னொரு புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்து வருகிறார் என்றும் கேரளாவில் படப்பிடிப்பு துவங்க அனுமதி தந்ததும் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும், மோகன்லால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார் என்றும் சொல்லப்பட்டது. இது மோகன்லால் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜீத்து ஜோசப் தனது முகநூல் பக்கத்தில், “என்னுடைய மோகன்லால் படத்தை நான் கிடப்பில் போட்டுவிட்டேன் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறான செய்தி. இந்தப்படத்தின் மீதி படப்பிடிப்பு முழுவதையும் லண்டனிலும் உஸ்பெகிஸ்தானிலும் நடத்த வேண்டியிருக்கிறது.. தற்போதுள்ள சூழலில் நிலைமை சீராகி அங்கு படப்பிடிப்பு நடத்த இன்னும் சில மாதங்கள் ஆகும்.. அதேசமயம் உலக அளவில் கொரோனா தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் கேரளாவும் ஒன்று.. எனவே விரைவில் கேரளாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.. அதனால் முழுக்க முழுக்க கேரளாவுக்கு உள்ளேயே படமாக்கும் விதமாக ஒரு சிறிய பட்ஜெட் படத்திற்கான கதையை தயார் செய்துள்ளேன். இதனால் மோகன்லால் படத்தை ஒதுக்கிவிட்டு இந்த படத்தை இயக்க போகிறேன் என தவறான செய்தியாக இது பரப்பப்படுகிறது. அதில் உண்மையில்லை. வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு நடத்த செல்லும் அளவுக்கு நிலைமை சீரானதும் ராம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்” என கூறியுள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒடிடியில் க்ளைமாக்ஸ் படத்தை வெளியிடும் ராம் கோபால் வர்மாஒடிடியில் க்ளைமாக்ஸ் படத்தை ... பவன் கல்யாண் படத்திற்காக இயக்குனர் கிரிஷின் பலே திட்டம் பவன் கல்யாண் படத்திற்காக இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in