Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வர் நிவராண நிதிக்கு 50 லட்சம் வழங்கிய மோகன்லால்

08 ஏப், 2020 - 18:59 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-donates-Rs.50-Lakhs-to-Kerala-CM

கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.. இதனால் சாதாரண தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தினசரி உணவுத் தேவைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு கைகொடுத்து உதவும் விதமாக திரையுலக பிரபலங்கள் அந்தந்த மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்று நிதி உதவி மற்றும் பொருள் உதவியை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் மோகன்லால், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு தனது பங்காக 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சூழலில் நீங்கள் (முதல்வர் பினராயி விஜயன்) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ரொம்பவே சிறப்பானவை.. இந்த சமயத்தில் என்னால் ஆன ஒரு சிறிய பங்களிப்பாக, மக்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவும் விதமாக இந்த 50 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. தொடரட்டும் உங்கள் பணி.. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ந்தவகையில் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு முதல் சினிமா நபராக நிதி வழங்கியுள்ளார் மோகன்லால்.. இதற்கு முன்னதாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த சமயத்தில் கேரள திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் விதமாகவும் பத்து லட்ச ரூபாய் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எட்டு கிராமங்களை தத்தெடுத்த மோகன்பாபுஎட்டு கிராமங்களை தத்தெடுத்த ... அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா அதிகாரியாக விஜய்சேதுபதி அல்லு அர்ஜுன் படத்தில் காட்டிலாகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kavitha - Chennai,இந்தியா
08 ஏப், 2020 - 23:52 Report Abuse
kavitha ஏ லால்பேட்டா ஐம்பது லட்சம் ஒரு தொகையா உனக்கு ? நல்லா கோடிகளில் புரண்டு புரண்டு எந்திரிக்கிற என்னய்யா இது நல்லவா இருக்கு அட கிறுக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in