கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சிவா கதாநாயகனாக நடித்து, கடந்த 2010ல் ரிலீசான படம் தமிழ்ப்படம். இந்தப் படத்தை இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கி இருந்தார். தமிழ் சினிமாவில் பல வருடகாலமாக காணப்பட்டு வந்த லாஜிக்கற்ற விஷயங்களைக் கிண்டல் செய்யும் விதமாக எடுக்கப்பட்டிருந்த தமிழ்ப்படம், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி பெற்றது.
தமிழ்ப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2018ல், இரண்டாம் பாகம் வெளியானது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளி வந்த இந்தத் ,படம் தமிழ் சினிமாவை மட்டுமின்றி, தமிழக அரசியலையும் கேலி, கிண்டல் செய்தது. முதல் பாகம் வெளியாகி, பத்து ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் டுவிட்டரில், 'தமிழ்ப்படம் 3 வருமா? என்று இயக்குநர் சி.எஸ்.அமுதனிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர், 2022ல் வெளியாகலாம் என்று பதில் அளித்திருக்கிறார்.