விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
பாகுபலி 2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியாபட் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி திரைக்கு வரும் இந்த படம் சுதந்திர போராட்ட கதையில் உருவாகி வருகிறது. ஜூனியர் என்டிஆர் - கோமரம் பீமாகவும், ராம் சரண் - சீதா ராமராஜா என்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வேடத்தில் நடிக்கிறார்கள்.
ஜூனியர் என்டிஆர், ராம்சரணின் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். என்றாலும் அதுகுறித்து அவர்கள் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ராம்சரணின் பிறந்த நாளான மார்ச் 27 மற்றும் ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளான மே 20 தேதிகளில் அவர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.