Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் ?

23 ஜன, 2020 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Did-Kamal-supports-Rajini?

ஒரு காலத்தில் ரஜினி வாய்ஸ் என்பது அவ்வளவு பிரபலமாக இருந்தது. அவர் என்ன பேசினாலும் செய்தி என்பதாக இருந்தது. அவரது வாய்ஸ் காரணமாகத்தான் 1996ம் ஆண்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றெல்லாம் சொன்னார்கள்.

அதன்பின்னர், ரஜினிகாந்த் அடிக்கடி வாய்ஸ் கொடுத்தார். ஆனால், அவையெல்லாம் செய்தியாக மட்டுமே இடம் பெற்றன. சமீப காலமாக ரஜினிகாந்த் கொடுக்கும் வாய்ஸ் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன.

சமீபத்திய ஈ.வே.ரா. பற்றிய அவரது பேட்டி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்திலிருந்து ரஜினிக்கு ஆதரவாக இயக்குனர் பேரரசு, குஷ்பு உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்கள் மட்டுமே ஆதரவு கொடுத்தார்கள்.

ரஜினியின் நெருங்கிய நண்பரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குரல் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், தன்னை பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசன், இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இருவரும் அரசியலில் இணைந்து பயணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதை இருவருமே வெளிப்படையாக சொல்லியும் உள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் பல கட்சித் தலைவர்களும் கருத்துக்களைக் பகிர்ந்துள்ள நிலையில் கமல்ஹாசனின் மவுனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
‛பட்டாஸ் நஷ்டமா...? - தயாரிப்பு நிறுவனம் மறுப்பு‛பட்டாஸ் நஷ்டமா...? - தயாரிப்பு ... என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் என் குரலுக்கு நான் சொந்தக்காரன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

vinu - frankfurt,ஜெர்மனி
25 ஜன, 2020 - 14:39 Report Abuse
vinu குப்பில உள்ளதை குடித்து விட்டு குப்புற படுக்காமல் தான் தோன்றி தனமா பேசுனா அதற்கு கமல் முட்டு கொடுக்க வேண்டுமா.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
24 ஜன, 2020 - 11:00 Report Abuse
Ellamman ரஜினி காஞ்சி கோவில் வடகலை தென்கலை பஞ்சாயத்திற்கு வாய்ஸ் கொடுப்பாரா? தென்கலையோடு சம்பந்தப்பட்ட ஆசாமியாயிற்றே??
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
24 ஜன, 2020 - 10:02 Report Abuse
mindum vasantham புரியாத மாறியே அரசியல் செய்கிறார் கமல்
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24 ஜன, 2020 - 08:55 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிச்சயம் கொடுப்பார் என்பதில் ஐயம் வேண்டாம்.
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
24 ஜன, 2020 - 00:19 Report Abuse
Vena Suna வாயை திறந்தால் ஆபத்துன்னு உலோக நாயகனுக்கு தெரியாதா ?
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in