Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன் இரண்டு படங்களை அடுத்தடுத்து முடித்த கார்த்திக் சுப்பராஜ்

09 நவ, 2019 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Karthik-Subbaraj-completed-his-Two-films

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் மூலம் மீண்டும் எனர்ஜியாகத் திரும்பியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். தனுஷ் நாயகனாக நடிக்க அவர் இயக்க வேண்டிய படத்தை எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போனது.

கடந்த செப்டம்பர் மாதம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி சில தினங்களுக்கு முன்பு முடித்துவிட்டார்கள். அது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் வெளியிட்டிருந்தார். இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படம்.

அடுத்து, தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜின் படமாக அதே செப்டம்பர் மாதம் ஆரம்பமான படம் 'பெண்குயின்'. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.

தன் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவான படங்களை ஒன்றாக ஆரம்பித்து ஒன்றாகவே முடித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அவரது தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வருமா ?'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு ... ராணா படத்தில் இணையும் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் ராணா படத்தில் இணையும் ஹாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in