Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வனிதாவிற்கு உதவிய விஜய்

23 ஜூலை, 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Vijay-helps-to-Vanitha-24years-back

குடும்பப் பிரச்சனைகளால் சோசியல் மீடியா மற்றும் யு-டியூப் வாயிலாக ரசிகர்களிடம் ஓரளவுக்கு அறிமுகமாகியிருந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.. சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு தனது அதிரடி நடவடிக்கைகளால் ரசிகர்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்தாலும் முன்பை விட இப்போது நன்கு பிரபலமாகி விட்டார். இத்தனைக்கும் இவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானதே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தான். 1995ல் வெளியான சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் வனிதா.

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா ஒரு பேட்டியின்போது இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வனிதாவிடம் பிக்பாஸ் வீட்டில் டாய்லெட் ரூம்களை அனைவருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கு சங்கடம் ஏற்படவில்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வனிதா, தான் பிறந்ததிலிருந்தே வசதியாக வளர்ந்ததால் தனக்கு பாத்ரூம் கூட பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்..

அதேசமயம் தான் நடிகையாக மாறிய பின்னர் படப்பிடிப்பிற்காக வெளியூர்களுக்கு சென்றபோது நிலைமை அப்படியே மாறியதாகவும் அங்கே கிடைத்த இடத்தில் படுத்து தூங்கி, கேரவன் வசதியெல்லாம் அப்போது இல்லாததால் கிடைத்த இடங்களில் உடை மாற்றி நடித்ததாகவும் கூறினார்.

அப்படி சந்திரலேகா படத்தில் விஜய் உடன் நடித்தபோது ஒரு காட்சிக்காக அங்கு உடை மாற்ற இடம் இல்லை. இதனால் அடம் பிடித்தார் வனிதா. அப்போது அருகில் இருந்த விஜய், இந்த சின்ன விஷயத்திற்கு ஏன் இப்படி பண்ற என கூறி அவரின் சியாரா காரில் சென்று உடை மாற்றிக் கொண்டு வரும்படி அனுப்பி வைத்தாராம்.. அதனால் கிடைத்த இடத்தில் கிடைத்த சவுகரியங்களை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள பழகிவிட்டது என கூறியுள்ளார் வனிதா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் கிளம்பிய திடீர் எதிர்ப்புராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் ... பட வெளியீட்டிற்காக மாறிய கவுதம் மேனன் பட வெளியீட்டிற்காக மாறிய கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
28 ஜூலை, 2019 - 08:06 Report Abuse
LAX க்ரிஷ்ணவேணிமா.. செம பன்ச்..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24 ஜூலை, 2019 - 04:24 Report Abuse
skv srinivasankrishnaveni எவ்ளோ புனித நதி என்றாலும் பொது இடத்துலே குளிக்கறது இல்லேம்மா டிரஸ் மாற்றுவது அவ்ளோகஷ்டம் என்பதால் நதியில் கால் அலம்பிண்டு கைலே எடுத்து அந்த நதிநீரை தலையே தெளிச்சுப்பேன் முடிஞ்சால் ஒரு பாட்டில் கொண்டுவந்து வாளிலே அந்த நீரை சேர்த்துண்டு பாத் ரூம்லே தான் குளிப்பேன் அந்தபுண்ணியம் poதும் . ஒருபெண்ணாக நடிகையாக உனக்கும் சங்கடம் இருக்கும் என்று நம்பறேன் , ஆண்கள் நிலைவேறு , ஆனால் பெண்கள் குழந்தைலேந்து கிழவிகள் வரை படுபாடுகளை தினம் நியூஸ் பேப்பர்லே பாக்குறோமே .பலரும் எண்ணுவதுபோல நடிகைகள் என்றால் கேவலமானவள் இல்லே என்று நம்பறேன் நடிப்புக்கு அவளை கேவலமா காட்டும் தயாரிப்பாளர்கள் தான் மகாகேவலமானம் படைச்சவனுக பார்த்து ரசிக்கும் ரசிகன் என்பவனோ .........அவ்ளோவக்கிரமானவன் , காசுக்குவேண்டி அம்மணமா நடித்தால் அமலாபால் தேவையா என்று எண்ணினேன் டிவோர்ஸீ என்றால் அவ்ளோகேவலமா பேசுவானுக தொண்டு கிழவன் கலியாணம் செய்துண்டு ஒருபெண்ணை விதவையாக்கலாம் ஒரு டிவோர்ஸ் ஆனபொன்னு அல்லது விதவை என்றால் மறுமணம் கேவலம் என்று பேசும் இவ்வுலகம் இந்தியர்களுக்கு இந்துக்கலாச்சாரம் என்று பீத்தல் பெருமைகள் வேறு பொய்களேதான் இஷ்டத்துக்கு மதம் மாறிண்டு திரியுவானுக முஸ்லீமாக ஒருவன் போறான்னால் அதுக்கு அருத்தம் இஸ்லாமிய மதத்தின்மீது அவனுக்குள்ள பற்று இல்லேம்மா அஞ்சிதிருமணம் செய்துக்கலாம் என்ற வேத வாக்குதான் கிறிஸ்துவனா போனால் மதபோதகனாயிட்டு என்ன பிராடும் செய்யலாம் என்ற திமிறுதான் மதம் மாறிய ஏவாளும் குரானும் ஓதுவது இல்லேம்மா பைபிளும் படிக்கறதே இல்லே , நிப்பந்தியா நிக்குறானுக இதுஉண்மை , சினிமாலே நடிச்ச்சுட்டு நடிகன் அடுத்த சினிமாலே வேறுபாத்திரமா நடக்கவேண்டும் அது அவா தொழில் ஒருவேளை செய்யாமல் வீட்டுலே பொண்டாட்டி கொண்டுவர துட்டுலே சினிமாபார்த்துண்டு டாஸ்மாக்கே கதியா வாழறவன் விமர்சனம் எல்லாம் குப்பை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in