'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் இசை என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ்குமார். தற்போது 'தங்கலான்' படத்திற்கான பின்னணி இசையை அமைத்துக் கொண்டிருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது.
இதன் இசை குறித்து, “தங்கலான்' பின்னணி இசை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் ஸ்பெஷலாக வித்தியாசமாக இருக்கப் போகிறது. குரல்களில் புதிய ஸ்டைல், விரைவில் திரையில் உங்களுக்கு தருவதில் உற்சாகம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு தனுஷ் ரசிகர் ஒருவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் அப்டேட் தாருங்கள் எனக் கேட்க அதற்கு ஜிவி, “நான்கு பாடல்களுமே உற்சாகமாக இருக்கிறது. தனுஷ் சார் இயக்கத்தில் முதல் முறை. ஒவ்வொரு பாடலுக்கும் காத்திருங்கள், ஒவ்வொன்றுமே ஸ்பெஷல். இதன் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது. அதுதான் எனது அடுத்த உடனடி ரிலீஸ் என நினைக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
தனுஷ் ரசிகர் அப்டேட் கேட்டதும் சிவகார்த்திகேயன் ரசிகர் சும்மா இருப்பாரா, “அப்போ அமரன்” எனக் கேட்க அவருக்கு, “அமரன்' படமும் கண்டிப்பாக ஸ்பெஷல்தான். அதன் வெளியீட்டுத் தேதி பற்றித் தெரிந்ததும் அப்டேட் தருகிறேன்,” என பதிலளித்துள்ளார்.
கதாநாயகனாக இந்த வருடம் அடுத்தடுத்து தோல்விகளைத் தந்தாலும் இசையமைப்பாளராக அடுத்தடுத்து சில நல்ல படங்கள் ஜிவிக்கு வர உள்ளது.