Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக்பாஸ்' வோட்டிங் : உண்மையா, பொய்யா ?

22 ஜூலை, 2019 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Did-Biggboss-Voting-is-True

பிக்பாஸ் சீசன் 3 ஒரு மாதத்தைத் தொட உள்ள நிலையில் முதல் நாளிலிருந்தே பரபரப்பாகச் சென்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் அமைதியாக கடந்த நிகழ்ச்சி, பின்னர் நுழைந்த போட்டியாளரான மீரா மிதுனால் கடும் சண்டைகளைச் சந்திக்க ஆரம்பித்தது. வீட்டில் உள்ள ஒவ்வொருவருடனும் அவர் சண்டை போடுவதை தன் வேலையாக வைத்திருந்தார்.

எலிமினேஷனுக்கான நாமினேஷனில் தொடர்ந்து மீரா மிதுன் கடந்த மூன்று வாரங்களிலும் இருந்து வருகிறார். பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா இதுவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வனிதா எப்படியும் காப்பாற்றப்படுவார் என்றுதான் நேயர்கள் எதிர்பார்த்தார்கள். அவர் இருந்தால்தான் சண்டைகள் அதிகம் வரும் என்ற கருத்து நிலவியது. ஆனால், வனிதா வெளியேற்றப்பட்டார். நேற்று, மோகன் வைத்யா வெளியேற்றப்படலாம் என நேயர்கள் முன்னரே யூகித்திருந்தார்கள். அது சரியாகவே நடைபெற்றது. ஆனால், நிகழ்ச்சியில் முதலில் காப்பாற்றப்பட்டவர் மீரா மிதுன் என கமல்ஹாசன் சொன்ன போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

அபிராமி, சேரன், சரவணன் ஆகியோரில் ஒருவர்தான் அதிக வாக்குகள் பெற்று முதலில் காப்பாற்றப்படுவார்கள் என்று பலரும் கருதினார்கள். ஆனால், அதற்கு மாறாக மீரா மிதுன் முதலில் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றது பலருக்கும் அதிர்ச்சியையும் அளித்தது. சமூக வலைத்தளங்களிலும் நேயர்களின் வாக்குப்படி இல்லாமல் அவர்களாகவே சிலரை வைத்துக் கொண்டும், சிலரை வெளியேற்றவும் முடிவு செய்கிறார்கள் என்று சொல்லி வருகிறார்கள். வனிதா இல்லாத காரணத்தால் கடந்த வாரம் சண்டைகள் அதிகமில்லை. எனவே, மீராவையும் வெளியே அனுப்பிவிட்டால் சண்டைகள் அதிகம் வர வாய்ப்பில்லை எனவேதான் மீராவைக் காப்பாற்றியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.

இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் மீரா மிதுன் கண்டிப்பாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரம் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்...

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கப்பூர் சென்று படம் பார்க்கும் விக்ரம் ரசிகர்கள்சிங்கப்பூர் சென்று படம் பார்க்கும் ... கடை திறப்பு விழாவில் நடிகருக்கு கத்திக்குத்து கடை திறப்பு விழாவில் நடிகருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kumzi - trichy,இந்தியா
27 ஜூலை, 2019 - 23:08 Report Abuse
kumzi டுபாக்கூர் மொக்க நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத நிகழ்ச்சி
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
27 ஜூலை, 2019 - 16:37 Report Abuse
முதல் தமிழன் Full of fake. Kamal Hassan cheats Tamil world. First if all he is an indecent fellow.
Rate this:
Pillai Rm - nagapattinam,இந்தியா
26 ஜூலை, 2019 - 11:05 Report Abuse
Pillai Rm வோட்டிங் முழு பொய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in