ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் 2017ம் ஆண்டு மரணமடைந்தார். அதற்கு முன்னதாக, அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க என்றொரு படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஸ்டீபன் ரங்கராஜன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
2017ம் ஆண்டு ஜனவரியிலேயே இந்த படத்தில் நடித்து முடித்து தனக்கான டப்பிங்கையும் பேசிவிட்டார் சந்திரஹாசன். மார்ச் மாதம் அவர் இறந்து விட்டார். இந்த படத்தில் அவருடன் டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ரிலீஸாகமல் இருந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.