வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
கடந்த சில படங்களாகவே மிகவும் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மோகன்லால், தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் 'இட்டிமாணி மேட் இன் சைனா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால் நடித்து வரும் கதாபாத்திரம் இதுதான் என தீர்மானிக்க முடியாதபடி அவ்வப்போது அவரது வித்தியாசமான கெட்டப்புகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது தொங்கும் மீசையுடன் வெள்ளை உடையுடன் பார்ப்பதற்கு சீனாக்காரர் போன்ற உருவத்தில் மோகன்லால் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. கேரளாவில் குன்னம்குளம் என்கிற பகுதியில் ஒரிஜினல் நிறுவன தயாரிப்புகள் போன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போலி தயாரிப்புகள் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும்.
இந்தப்படத்தின் கதைக்களமும் இதுதான். இதை தொடர்புபடுத்தி தற்போது சீனாவில் மோகன்லால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான், தற்போது வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 34 வருடம் கழித்து இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் ராதிகா சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.