இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
பாகுபலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் ஒப்பந்தமான டெய்சி எட்கர் ஜோன்ஸ். இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள, அதற்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜமவுலி படத்தில் நடித்தாலும் ஆலியா பட்டுக்கு மிகப்பெரிய சந்தோஷம் இல்லை என்று சொல்கிறார்கள். பொதுவாகவே ராஜமவுலி படத்தில் கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ஆனால் இந்தப்படம் கதாநாயகர்களை மையப்படுத்தி நகர்வதால் ஆலியா பட்டுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. மிக பிரமாண்டமான ஒரு படத்தில் ஆலியா பட்டும் ஒரு அங்கமாக இருக்கிறார் அவ்வளவு தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்..