Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் : ஜோதிகா

25 ஜூன், 2019 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Jyothika-about-government-school

காற்றின் மொழி படத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியாக உள்ள படம் ராட்சசி. அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. பூர்ணிமா பாக்யராஜ், கவிதாபாரதி, மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தணிக்கையில் யு சான்று பெற்றுள்ளது. வருகிற ஜூலை 5ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில் ராட்சசி படத்தின் இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

ஜோதிகா பேசியதாவது : "கடமை தவறும் ஆசிரியர்களுக்கும், கடமை தவறும் அரசுக்கும் பாடமாக இந்த பட கதை அமைந்துள்ளது. இந்த படத்தில் நிறைய கடினமான வசனங்கள் இருந்தன. முன்னரே முழு கதையையும் கொடுத்துவிட்டதால் அதற்கு தயாரானேன். சில கடினமான வசனங்களை சூர்யாவே சொல்லி கொடுத்தார்.

புதுமுக இயக்குனர் படங்களில் நடித்தது இல்லை, இதுவே முதல் முறை. இப்போது உள்ள புதியவர்கள் நிறைய விஷயங்களுடன் வருகிறார்கள். அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். இந்தப்படத்தின் டிரைலர் வந்த உடன் சாட்டை படம் உள்ளது என்றும், பெண் சமுத்திரகனி என்றும் கூறினார்கள். இந்தப்படம் கண்டிப்பாக அதை தழுவி எடுக்கப்பட்டது அல்ல.

இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து சமுதாயத்திற்கு முக்கியமானது. சாட்டை, பள்ளிக்கூடம் படங்கள் போன்று இந்தப்படம் இருந்தாலும் இது போன்று இன்னும் நூறு படங்கள் வர வேண்டும். இன்றைக்கு அரசு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பாடம் எடுக்க கூட போதிய ஆசிரியர்கள் இல்லை. இப்படி இருக்கும் சூழலில் அவர்கள் எப்படி நீட் தேர்வு எழுத முடியும்.

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
ஜீவா, விமலுடன் மோதும் ஜோதிகாஜீவா, விமலுடன் மோதும் ஜோதிகா ஓ பேபி - சமந்தா ரகசியம் சொன்ன நந்தினி ரெட்டி ஓ பேபி - சமந்தா ரகசியம் சொன்ன நந்தினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 ஜூன், 2019 - 05:12 Report Abuse
meenakshisundaram இது ஒரு கண்மூடித்தனமான சாடுதல்,ஏன் இவர் இந்த மாதிரி கருத்தை வெளி இடுகிறார் .பாவம் சிவா குமார் ,அவர் இந்த மருமகளுக்காக எத்தனை முறை கோர்ட் படி ஏறுவார்?
Rate this:
Muru - BRISBANE,ஆஸ்திரேலியா
26 ஜூன், 2019 - 04:13 Report Abuse
Muru மோசமான, கொச்சையான, அநாகரீக , குடும்ப பண்பு இல்லாத, சமுதாய அக்கறை இல்லாத, அருவருக்க தக்க, படங்கள் எடுப்பதை நிறுத்தினால் தான் எல்லாம் முன்னேறும். எந்த ஒரு படமும் முழுமையாக நல்ல படம் என்று கூற முடியாத அவல நிலை. அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்க. முடிந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது கொடுக்கும் படங்களை எடுக்க முயற்சி செயுங்கள்.
Rate this:
kumar - hyderabad,இந்தியா
26 ஜூன், 2019 - 03:27 Report Abuse
kumar Shame for tasmac tamilans and result of quota ion teachers.
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
26 ஜூன், 2019 - 01:47 Report Abuse
SaiBaba நாங்க கேவலமாகத்தான் இருப்போம். நீட்டுக்காக எங்களை உயர்த்திக்கணுங்கற அவசியமில்லை. நீட்டை நாங்கள் எதிர்ப்போம்.
Rate this:
25 ஜூன், 2019 - 21:00 Report Abuse
Megavarnan Raja aama Jo unga paiyan entha schoolla padikkuraan
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in