Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்

18 ஜூன், 2019 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Rakeysh-Omprakash-Mehras-Mahabharata

இந்தியாவின் பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்' படத்தை படமாக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தியாவின் சினிமா பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள். 'பாகுபலி' படத்தைத் தந்த ராஜமௌலி, இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஆமிர்கான் ஆகியோர் 'மகாபாரதம்' படத்தை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க மகாபாரதம் கதையைப் படமாக்கப் போவதாக அறிவித்து அதன்பின் கைவிட்டார்கள்.

இப்படி, இதற்கு முன் வந்த மகாபாரதம் படம் பற்றி அறிவிப்புகளும், ஆசைகளும் ஒரு புறமிருக்க 'ரங்தே பசந்தி, பாக் மில்கா பாக்' படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, மகாபாரதம் கதையைப் படமாக்க 'மகாபாரத் - தி கிரேட்டஸ்ட் பேட்டில் எவர் பாட்' (Mahabharat: The Greatest Battle Ever Fought) என்ற தலைப்பை இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் அசோசியேஷனில் பதிவு செய்துள்ளார்.

இவராவது மகாபாரதம் கதையைப் படமாக்குவாரா அல்லது இதுவும் ஆரம்பக் கட்டத்திலேயே நின்று விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
படக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்படக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : ... ஆமீர்கான் மனைவி நடுநிலைவாதி.. நான் பெண்ணியவாதியா..? நடிகை காட்டம் ஆமீர்கான் மனைவி நடுநிலைவாதி.. நான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

agni - chennai,இந்தியா
19 ஜூன், 2019 - 09:34 Report Abuse
agni மஹாபாரதம் என்றால் பாண்டவர்கள்,கௌரவர்கள்,போர் இதை தான் எப்போதும் காட்டுகிறார்கள். மஹாபாரதத்தில் பலரும் அறியாத எத்தனை கதாபாத்திரங்கள், வம்சங்கள் உருவான விதம், பல நாடுகள், தேசங்கள், நிகழ்வுகள் , மக்கள், பக்தி, கர்மம், முக்தி என எத்தனை உள்ளது. யாராலும் முழுமையான மஹாபாரத கதையை எடுக்கமுடியாது. அதுவும் இரண்டரை மணி நேரத்தில் ஒரு சில நிகழ்வுகளை காட்டி இது மட்டுமே மகாபாரதம் என்றால் பொழுதுபோக்குக்கு அதை பார்ப்பவர் வேண்டுமானால் ஏற்கலாம். யாராலும் முழுமையான மஹாபாரத கதையை எப்போதும், எந்த காலத்திலும் எடுக்க முடியாது, அந்த அளவுக்கு மஹாபாரதம் மிக பெரிய இதிகாச காவியம். உலகில் மிக பெரிய இதிகாசம் எது என்றால் அது மஹாபாரதம் மட்டும் தான்.
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
20 ஜூன், 2019 - 09:49Report Abuse
எதிர்க்குரல் மூட்டை மூட்டையாய் புழுகல்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in