Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜராஜ சோழன் பற்றி விமர்சனம் : முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு

12 ஜூன், 2019 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Director-Ranjith-apply-for-bail

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கி உள்ளார். தற்போது ஹிந்தியில் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை தழுவி படம் எடுத்து வருகிறார். தலித் அரசியல் பேசும் ரஞ்சித், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் தலித் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஞ்சித், மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் ஜாதி ரீதியிலான விமர்சனங்களையும் முன் வைத்தார்.

இவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். சாதி பிளவு ஏற்படும் வகையில் அவரது பேச்சு உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி., உத்தரவின் பேரில் திருப்பனந்தாள் போலீசார் மதகலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார் ரஞ்சித். வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே நான் பேசினேன். எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என தனது மனுவில் கூறியிருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை நாளை(ஜூன் 13) அல்லது நாளை மறுநாள்(ஜூன் 14) எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் படம் இயக்கும் ராஜூ சுந்தரம்மீண்டும் படம் இயக்கும் ராஜூ சுந்தரம் தலைவி' படம் வித்யாபாலன் கைவிட்டுப்போனது ஏன் ? தலைவி' படம் வித்யாபாலன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
14 ஜூன், 2019 - 02:23 Report Abuse
Murugan இவனுக்கு எல்லாம் இரண்டு படம் எடுத்து வெற்றி காணக்காட்டியும் என்ன ஒரு மமதை ..
Rate this:
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
13 ஜூன், 2019 - 18:31 Report Abuse
Saravanan AE இந்த அறிவு ஜீவியோட படத்திலே ரஜினி நடித்த ஒரே காரணத்துக்காக படத்தைப் பாத்துட்டு வந்த எத்தனை பேர் (என்னையும் சேர்த்து) ரஜினி மீது வெறுப்பு கொண்டார்கள்? அது என்ன ராவண புராணத்தை படிப்பானாம்? நாங்க எல்லாம் உங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு ராவணனா மாறவா? ரஜினிக்கும் தனுஷுக்கும் சேத்துதான்? துப்பு கெட்டவர்கள்
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
13 ஜூன், 2019 - 09:58 Report Abuse
ngopalsami நுணலும் தன வாயால் கெடும்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
13 ஜூன், 2019 - 09:27 Report Abuse
S Ramkumar இவ்வளவு பாஞ்சி உளுந்து பேசிவிட்டு இப்ப என்னத்துக்கு முன் ஜாமின். தில்லு இருந்தா நின்னு பாக்க வேண்டியது தானே.
Rate this:
prasath -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூன், 2019 - 07:44 Report Abuse
prasath , ராஜராஜ சோழன் நிலத்தை பறித்ததற்கு உண்டான சான்றினை பெற்று பிறகு ஜாமீன் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in