Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?: கஸ்தூரி ஆவேசம்

12 ஜூன், 2019 - 14:44 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-slams-a-youth-posts-Obscene-Photos

செல்போனில் போட்டோ எடுக்கும் வசதி வந்த பின், என்ன செய்கிறோம்; எதற்காக செய்கிறோம் என்பதே புரியாமல் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞன், கடந்த சில நாட்களுக்கு முன், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.

அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டார். பின், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டிபிடித்து, முத்தம் கொடுத்து படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களையெல்லாம், சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். இது, பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக, முஜிபுர் ரஹ்மான் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதை வைத்து, போலீஸார் முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப்பதிவும் செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை! பொம்பள மாதிரி இருந்தா, கல்லை கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்!

இவ்வாறு கஸ்தூரி, அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.
Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பேய் விரட்டும் வேலையில் ஜி.வி.பிரகாஷ்பேய் விரட்டும் வேலையில் ... தில்லானா மோகனாம்பாளுக்கு இன்று 87வது பிறந்த நாள் : பத்மினி பற்றிய ஒரு நினைவு தில்லானா மோகனாம்பாளுக்கு இன்று 87வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasanth - Chennai,இந்தியா
12 ஜூன், 2019 - 17:52 Report Abuse
Vasanth இந்து மதம் மிகமிக பழமையானது. உயிரினங்களின் படைப்பே இங்கிருந்துதான் ஆரம்பமானது. புதிய உலகம் என்பதால் அப்பொழுது ஆடை அணிவது என்பதைப்பற்றி எண்ணம் அறவே இல்லை. (ஏன் நம் முந்தய தலைமுறை தாத்தா பாட்டி காலங்களில் பெண்கள் மேல்சட்டை அணியாமல் சேலை மட்டுமே அணிந்தனர்.) அரசர்கள் காலகட்டத்தில்தான் அங்கங்களை மறைக்கும் விதமாக நீண்ட துனிகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆகையினால்தான் அக்கால கோயில்களில் நிர்வாண மற்றும் அரைநிர்வாண சிலைகள் இருந்தன. இது அக்காலத்தில் வாழ்வுமுறை. இதில் துளியும் கலவி நோக்கமில்லை. ஆனால், இரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்தில் புத்தரின் வருகைக்கு பின், ஆசை, சுயநலம், உடலின்பம் ஆகியவற்றை விட்டு பிறர் நலத்திற்காக தியாகம் செய்து, எளியவர்களின் நன்மைக்காக வாழவேண்டும் என்ற அவரின் நீதிபோதனைகள் சில கயவர்களால் அவரின் கொள்கைக்கு எதிராகவே உடலின்பமே உயிரின் முக்கியம் என்று அவரின் பிரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தி விட்டனர். இந்து மதத்தில் "தாந்த்ரீகம்" என்ற ஒன்றை உருவாக்கி உட்புகுத்தி தாந்தரீகமும் இந்துமதத்தில் ஓன்று என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை உண்டாக்கிவிட்டனர். கலவி கொள்வதுமாதிரியான சிலைகளை அவர்கள் உருவாக்கிய கோவில்களில் நிர்மாணித்து விட்டனர். இன்றளவும் நாம் உண்மையை உணராமல் அதை கலை, புராணத்தில் உள்ளது என்று மனதினை நம்மைஅறியாமலே சமாதானம் செய்து பழகிக்கொண்டோம். உலகில் எல்லோரும் ஒரேமாதிரியாக இருக்கமாட்டார்கள். உண்மையான இந்துக்கள் இத்தகைய சிலைகளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்காவிட்டாலும், மற்றவர்கள் இதை மிகமிக காம எண்ணத்துடனும், இளைகாரமாகவும்தான் பார்ப்பார்கள். அதற்க்கு உதாரணமே இதோ இந்த நபரின் வக்கிரமான எண்ணத்தை வெளிக்காட்டும் ஆதாரங்கள். இதைப்போன்ற உலகில் எக்கச்சக்கம் பேர் உள்ளனர். ஐய்யா, சிலை வடிப்போரே, ஓவியம் வரைவோரே "கலை" என்ற பெயரில் தெய்வ சிலைகளுக்கு சிறு துணியில் அங்கம் தெரியும்படியோ அல்லது ஆடையோ இல்லாமலோ சிலையோ, படங்களோ உருவாக்காதீர்கள். ஒழுக்கக்கேடான மனிதர்களால் உருவாக்கப்பட்ட "தாந்த்ரீகம்" என்ற பெயரில் ஒழுக்கக்கேடான செயல்களை கொண்ட சிலைகளை கோயில்களில் காட்டாதீர்கள். காலத்திற்கேற்றாற்போல் நாம் பல கடும் விரதம், உபாசனை, முறைகளை மாற்றி கொண்டுவிட்டோம். அப்படி, இருக்கும் பொது ஏன் இத்தகைய சிலைகளும், படங்களும் பல்வேறு நாட்டவர்கள் மத்தியில் ஆபாச எண்ணங்களை தூண்டும் என்று தெரிந்தே ஏன் நாம் அதை தொடரவேண்டும்? அல்லது அனுமதிக்க வேண்டும்? உங்களிடம் மன்றாடி கெஞ்சி கேட்கிறேன், தயவுசெய்து நம் தெய்வ திருவுருவங்களை பிறருக்கு கேலிப்பொருளாக்காதீர்கள்
Rate this:
tshajahan - Vellore,இந்தியா
12 ஜூன், 2019 - 17:19 Report Abuse
tshajahan Please punish that idiot severely.
Rate this:
mei - chennai,இந்தியா
12 ஜூன், 2019 - 16:20 Report Abuse
mei இலங்கையில் பௌத்த மதத்தை அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பௌத்தம் உட்பட பல மாதங்கள் தோன்றிய இந்தியா மத சார்பின்மை என்ற பெயரில் அந்நிய மதங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. இப்படியே போனால் இந்து மதமும் அதன் கலாச்சாரமும் கோவில்களும் அழிந்து விடும். இந்து மதத்தை அவமதிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரவேண்டும்
Rate this:
mei - chennai,இந்தியா
12 ஜூன், 2019 - 16:16 Report Abuse
mei முஹம்மது படத்தை கார்ட்டூன் போட்டவர்களை சுட்டு தள்ளினார்கள். ஆனால் இந்தியா தான் மத சார்பின்மை நாடாச்சே. இந்துக்களையும் இந்து சமயத்தையும் யார் வேண்டுமானாலும் என்னவும் சொல்லலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in