Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

215 அடி கட்அவுட், 6 லட்சம் செலவு, தடுப்பாரா சூர்யா ?

02 ஜூன், 2019 - 12:22 IST
எழுத்தின் அளவு:
6-lakh-cost-cut-out-for-surya-movie

தமிழ் சினிமா உலகில் மற்ற முன்னணி ஹீரோக்களை விட தன் அகரம் பவுண்டேஷன் மூலம் பல சமூக சேவை விஷயங்களைச் செய்து வருபவர் சூர்யா. படிக்க வசதியில்லாத ஏழை, மாணவ மாணவிகளை அவரது குடும்பத்தினர் பல வருடங்களாக படிக்க வைக்கின்றனர். தன் குடும்பப் பின்னணி, வம்பு தும்புகளுக்கு செல்லாதவர் என தனி இமேஜில் இருப்பவர் சூர்யா.

அவர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'என்ஜிகே' படத்திற்காக திருத்தணியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சுமார் 6 லட்ச ரூபாய் செலவு செய்து, 215 அடி உயர கட்அவுட் ஒன்றை வைத்தனர். அது பற்றி செய்திகள் வெளிவந்த ஒரு நாளிலேயே நகராட்சி அதிகாரிகளால் அந்த கட்அவுட் அகற்றப்பட்டது.


முன் அனுமதி பெற்றுத்தான் அந்த கட்அவுட்டை ரசிகர்கள் வைத்தாகச் சொல்கிறார்கள். ஆனால், பட வெளியீட்டன்று அதன் மீது ஏறி மாலை போடுவது, பாலாபிஷேகம் செய்வது ஆகியவற்றால் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்றுதான் நகராட்சி அதிகாரிகள் அதை அகற்றினார்கள் என்றும் சொல்கிறார்கள்.


6 லட்ச ரூபாய் என்பது அந்த ரசிகர்களின் உழைப்பில் வந்த பணமாகவோ அல்லது அவர்களது அப்பா, அம்மாக்களிடம் சண்டை போட்டு வாங்கிய பணமாகவோ இருக்கலாம். அந்தப் பணத்தை வைத்து எத்தனை ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்திருக்கலாம். அப்படி படிக்க வைப்பதை தன் முக்கிய சேவையாகச் செய்யும் சூர்யா அவரது ரசிகர் மன்றத்தினருக்கு ஆலோசனை வழங்கி அந்தப் பணத்தை அதற்காகப் பயன்படுத்தியிருக்கலாம். பள்ளிகள் திறக்கும் இந்த நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கியிருக்கலாம்.


எதிர்காலத்தில் இப்படி கட்அவுட் கலாச்சாரத்தை தடுக்க சூர்யா முயற்சி எடுத்தால் அது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற தினமலர் வாசகர்கள்இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற ... ஹேர்ஸ்டைலை மாற்றும் சசிக்குமார் ஹேர்ஸ்டைலை மாற்றும் சசிக்குமார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
02 ஜூன், 2019 - 13:56 Report Abuse
Tamilan எவனாயிருந்தா என்ன??? எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in