Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டிக்கொண்ட ரஜினிகாந்த்

20 மே, 2019 - 13:41 IST
எழுத்தின் அளவு:
rajini-says-that-he-will-pray-for-parthiban-to-get-oscar-award

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம முழுக்க அவர் மட்டுமே நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் இதுவாகும். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த இந்த விழாவில் கமல்ஹாசன், கே.பாக்யராஜ், ஷங்கர், லிங்குசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், அமீர்கான், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் பார்த்திபனின் இந்த முயற்சியை பாராட்டி பேசிய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர் ரஜினி பேசுகையில், என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல படைப்பாளி. வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர். அவர் திடீரென்று டைரக்சனை நிறுத்தி விட்டு நடிக்க வந்ததும் எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இவ்ளோ பெரிய நல்ல படைப்பாளி படம் இயக்குவதை விட்டுட்டு நடிக்க வந்திருக்கிறாரே என்று பீல் பண்ணினேன்.


ரீசன்டா அவரை மீட் பண்ணினபோது கேட்டேன். அப்போது ஒத்த செருப்பு சைஸ் 7 அப்படின்னு ஒரு படத்தை இயக்கி நடிச்சிட்டு வர்றேன்னு சொன்னார். இது ரொம்ப வித்தியாசமான முயற்சி. தனி ஒருவர் படம் முழுக்க நடித்திருக்கிறார். 1960ல் சுனில்தத் என்பவர் இந்தியில் ஏதேன் என்று ஒரு படம் எடுத்தார். அதில் அவர் மட்டுமே நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.


அதுக்கு அப்புறமா தென்னிந்தியாவில் இப்போதுதான் முதல்தடவையாக பார்த்திபன் எடுத்திருக்காரு. அதோடு இவரே கதை வசனம் எழுதி, இயக்கி, தயாரித்து, நடிச்சிருக்காரு. உலக அளவில் இதுதான் முதல் தடவைன்னு நெனைக்கிறேன்.


இந்த முயற்சியே வித்தியாசமாக இருக்கு. பார்த்திபனுக்கு என்னுடை ய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல கதைக்கருவில், குறைந்த பட்ஜெட்டில் எடுத்து இந்த படத்தை நல்ல பப்ளிசிட்டி செய்தாலே பெரிய அளவில் வெற்றி பெற்று விடும். அந்தவகையில இந்த படத்தை பார்த்திபன் நல்லவே எடுத்திருப்பாரு. அதோடு பப்ளிசிட்டியும் அவர் நன்றாக செய்து விடுவார். அதனால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.


அதோடு, இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்றும் நான் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன்-2 பற்றி காஜல்அகர்வால் வெளியிட்ட தகவல்இந்தியன்-2 பற்றி காஜல்அகர்வால் ... 14 வருடங்களுக்குப்பிறகு சிம்பு எடுக்கும் முயற்சி 14 வருடங்களுக்குப்பிறகு சிம்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21 மே, 2019 - 14:37 Report Abuse
Mirthika Sathiamoorthi Mr. வாசுதேவன் சூப்பர்ஸ்டார் நடிக்கிறாரா நடிக்கலையா அந்த ஆராய்ச்சிக்கு போகும் முன்.. வித்தியாசமான படங்களில் அவர் நடித்தால் எத்தனை தியேட்டர் ஓனர் அந்த படம் 5 காட்சிகள் திரையிட அனுமதிப்பாங்கன்னு நெனைக்குறீங்க? மாஸ் ஹீரோக்கள் படங்களே மண்ணை கவ்வும் இந்த சூழ்நிலையில் ரஜினியின் இந்த வித்தியாச முயற்சியை எத்தனை வினயோகிஸ்தர்கள் ரசிப்பாங்கன்னு நெனைக்குறீங்க? ரஜினியின் மார்க்கெட் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் உலக மெங்கும் இருக்கு....இந்த மார்க்கெட்டை நம்பித்தானே தயாரிப்பாளருங்க படம் எடுக்க வர்றாங்க..அங்கெல்லாம் படம் ஓடலின்னா அவங்க நெலமை? ..நீங்க சொல்லிட்டு போயிடுவீங்க ரஜினி படம் பிளாப் அப்படீன்னா அத்தனை வினயோகிஸ்தர்களும் ரஜினி வாசலில் நிப்பாங்க... அந்த பணத்தை யாருங்க செட்டில் பண்ணுவது ? சொந்த காசுல சூனியம் வச்சுக்க சொல்றீங்க.... அமீர்கான் கூடத்தான் பாராட்டி ட்விட் பண்ணியிருக்காரு... அவர்கிட்டே கேளுங்க இது சபை மரியாதையா இல்ல பார்த்திபன் படத்தில் நடிக்கிற ஐடியா இருக்கான்னு...ஓஓஒஹ்ஹ உங்களுக்கு ஹிந்தி தெரியாதா? ரஜினின்னா மட்டும் ஏன் வரின்சு கட்டிட்டு வர்றாங்கன்னு புரியல....
Rate this:
21 மே, 2019 - 11:49 Report Abuse
கிழவன் ரஞ்சித் படத்துல நடிச்சது தான் இவர் செஞ்ச மிக பெரிய தப்பு ...கார்த்திக் சுப்புராஜ் காப்பாத்திட்டார் ...லூசிபரை தமிழில் ரஜினி செய்தால் அமர்களமாய் இருக்கும் ....காத்திருக்கிறோம் தர்பாருக்கு ...
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20 மே, 2019 - 16:10 Report Abuse
Vasudevan Srinivasan சூப்பர்ஸ்டார் அவர்களின் இந்த மாதிரியான பாராட்டுக்கள் பல இயக்குனருக்கும் கிடைப்பதுண்டு ஆனால் அவையெல்லாம் வெறும் சபை மரியாதை பேச்சுதானோ என்றே தோன்றுகிறது வித்யாசமான இயக்குனர் என்று பாராட்டுகிறாரே ஏன் அவருடைய இயக்கத்தில் ஒரு படம் பண்ணவில்லை இவர் நினைத்தால் பண்ணியிருக்கலாம்..
Rate this:
Simple_Tamizan - Chennai,இந்தியா
20 மே, 2019 - 21:11Report Abuse
Simple_TamizanRajinikanth is not the only deciding authority for his movies. He is a big institution and unfortunately any variation from the same image / formula is not accepted by the fans and the movie flops. We have seen this every time he changes his usual formula....
Rate this:
Simple_Tamizan - Chennai,இந்தியா
20 மே, 2019 - 21:14Report Abuse
Simple_TamizanRajinikanth is not the only deciding authority in his movies as it is an institution. Any change to the usual formula is not accepted by the fans and the movie flops. We have seen this in past movies when he tries to change the usual setup. Unfortunate but true. I believe his wishes are sincere....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21 மே, 2019 - 10:50Report Abuse
Mirthika SathiamoorthiIn the film industries, once an image d that can not be changed... For an example, will you accept Jackie Chan movie without kung fu and comedy? Or will you ready to watch that kind of movies? Even you may ready to watch, will the theater owners accept to put a 5 shows per day? NO right?... Did ever you share your opinion about Jackie chan, why he is acting like this kind of movies? NEVER right? Don't forget we are also that kind of fans.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in