Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஞ்சனா ஹிந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் திடீர் விலகல்

19 மே, 2019 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-steps-down-as-director-of-Akshay-Kumars-Laxmmi-Bomb

தமிழில் வெளிவந்த காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் லட்சுமி பாம் என பெயரிடப்பட்டு சில நாட்களுக்கு முன்பு மும்பையில் ஆரம்பமானது. ராகவா லாரன்ஸ் இயக்க அக்ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோருடன் படப்பிடிப்பும் ஆரம்பமானது.

இந்நிலையில் நேற்று திடீரென அந்தப் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டர் தனக்குத் தெரியாமலேயே வெளியானது என்றும், படத்திலிருந்து வெளியேறுவதாகவும் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


“தமிழில் ஒரு பழமொழி உண்டு. மதியாதார் வாசல் மிதியாதே என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் பணம், புகழ் ஆகியவற்றை விட ஒரு மனிதனுக்கு சுயமரியாதைதான் பெரிது. அதனால், காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்திலிருந்து நான் வெளியேற முடிவு செய்துவிட்டேன்.


அதற்கான காரணம் என்னவென்று நான் சொல்ல விரும்பவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, அதில் ஒன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர். எனக்குத் தெரியாமலேயே, என்னுடன் கலந்து ஆலோசிக்காமலேயே அதை வெளியிட்டுள்ளார்கள். இது மூன்றாம் மனிதர் மூலம்தான் எனக்குத் தெரிய வந்தது.


தன் படத்தின் முதல் பார்வை வெளியீடு வேறொருவர் பற்றி தெரிந்து கொள்வது ஒரு இயக்குனருக்கு மிகவும் வலியானது. நான் அவமரியாதையாகவும், ஏமாற்றமாகவும் இதை நினைக்கிறேன். ஒரு கிரியேட்டராக அந்த போஸ்டர் டிசைனில் எனக்கு விருப்பமில்லை. இது வேறு எந்த இயக்குனருக்கும் கண்டிப்பாக நடக்கக் கூடாது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை நானே வைத்துக் கொள்ளலாம், அவர்களுடன் நான் எந்த அக்ரிமென்ட்டும் போடவில்லை.


ஆனால், நான் அப்படிச் செய்ய மாட்டேன். தொழில்முறையாக அது சரியும் கிடையாது.


இந்த ஸ்கிரிப்ட்டை நான் தரத் தயாராக இருக்கிறேன். அக்ஷய் குமார் சார் மீது நான் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருக்கிறேன். அவர்கள் விருப்பப்படி அவர்கள் யாரை வேண்டுமானாலும் இயக்குனராக மாற்றிக் கொள்ளட்டும். சீக்கிரமே அக்ஷய்குமார் சாரை சந்தித்து ஸ்கிரிப்டைக் கொடுத்துவிடுவேன். நல்ல முறையில் இந்தப் படத்திலிருந்து விலகிவிடுவேன். குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படம் பெரும் பெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என தெரிவித்துள்ளார்.


படம் ஆரம்பமான சில நாட்களிலேயே ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றி சென்டிமென்ட் : ரஜினி போட்ட உத்தரவு!வெற்றி சென்டிமென்ட் : ரஜினி போட்ட ... பிக் பாஸ் போட்டியாளர் ஆகும் ஜாங்கிரி மதுமிதா! பிக் பாஸ் போட்டியாளர் ஆகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vadivel - bhavani,இந்தியா
19 மே, 2019 - 15:55 Report Abuse
vadivel எண்ணம் போல் வாழ்வு... அவ்வளவு தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in