Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம் : பொதுக்குழு நடக்குமா.?

27 ஏப், 2019 - 16:01 IST
எழுத்தின் அளவு:
Special-officer-take-charge-on-Tamil-Film-Producer-council

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பு வகித்து வருகின்றனர். இவர்களின் பதவிக்காலம் முடிந்தும் கூட இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இது ஏற்கனவே பிரச்னையானது.

பல்வேறு குற்றச்சாட்டு
சங்கத்தில் இருந்த ரூ.7.5 கோடி பணம், சங்க குழுவின் ஒப்புதல் இன்றி முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது. இளையராஜா இசை நிகழ்ச்சி, தி.நகரில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்கள் சங்கம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தற்போது உள்ள நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்ட பிரச்னைகள் நடந்தன.

சிறப்பு அதிகாரி நியமனம்
இந்நிலையில் இந்த பிரச்னைகள் எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சேகர் என்பவரை அரசு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. வரவு, செலவு கணக்கு சரியாக இல்லை, உறுப்பினர்களுக்கு உதவித்தொகை முறைகேடு மற்றும் சங்கத்தில் இருந்த வைப்பு நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக பொதுக்குழு கூட்டி, தேர்தல் அறிவித்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வரை இவர் தான் சங்கத்தினை வழி நடத்துவார். சுருக்கமாக சொன்னால் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசு வசம் சென்றுள்ளது என்றே சொல்லலாம்.

அதிருப்தி தயாரிப்பாளர்கள்
சங்கத்திற்கு பூட்டு போட்ட விவகாரத்தில் செயல்பட்ட 30 தயாரிப்பாளர்களுக்கு விஷால் தலைமையிலான நிர்வாகம் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. அதை மனதில் வைத்துக் கொண்டே தயாரிப்பாளர் சங்கத்தை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என அந்த 30 தயாரிப்பாளர்களும் இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

வழக்கு தொடர முடிவு
சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர விஷால் தரப்பு தயாராகி வருவதாகவும், திங்கள் கிழமை அவர்கள் இது தொடர்பாக அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் தெரிகிறது. விஷால் தரப்பிலான நிர்வாகம், மே 1ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தது. அந்தக் கூட்டத்தை நடத்தவிடக் கூடாது என்ற காரணத்தால்தான் இந்த சிறப்பு அதிகாரி நியமனம் என்றும் சொல்கிறார்கள்.

பொதுக்குழு நடக்குமா.?
இதற்கிடையே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம், மே, 1ம் தேதி, எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் நடப்பது சந்தேகமாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இஸ்லாம் முறைப்படி எளிமையாக நடந்த குறளரசன் திருமணம்இஸ்லாம் முறைப்படி எளிமையாக நடந்த ... புதியபடம் ஆரம்பம்: ஜோதிகா, கார்த்திக்கு சூர்யா வாழ்த்து புதியபடம் ஆரம்பம்: ஜோதிகா, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in