Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து நடிகர்களுக்கு காயம் : சிறப்பு பூஜைக்கு ஆர்.ஆர்.ஆர்., படக்குழு ஏற்பாடு

27 ஏப், 2019 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Hero-injured-:-RRR-Team-to-be-made-special-pooja

தெலுங்கு படம் பாகுபலியை இயக்கிய ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படம் ஆர்.ஆர்.ஆர்., இந்தப் படத்தை ரூபாய் 300 கோடி செலவில் எடுத்து, அதை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியிட தீர்மானித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திர கனி மற்றும் அலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகை டெய்சியும் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகிக் கொண்டார்.

ஐதராபாத் மற்றும் புனேயில் பிரம்மாண்ட செட்கள் அமைத்து, படபிடிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டு, ஐதராபாத்தில் அநேக காட்சிகளை படமாக்கி விட்டனர். அடுத்தகட்டமாக, மொத்த படக் குழுவும் புனேவுக்குச் சென்றுள்ளது.

படபிடிப்பு துவங்குவதற்கு முதல் நாள், ராம் சரணுக்கு காயம் ஏற்பட்டு விட, படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. இதனால், படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் நடிகர் - நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கால்சீட் வீணாவதை விரும்பாத இயக்குநர் ராஜமவுலி, சட்டென யோசித்து ஜூனியர் என்.டி.ஆர்., சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கத் துவங்கினார்.

படபடிப்பில் இருந்த ஜூனியர் என்.டி.ஆருக்கும் கை மணிக்கட்டில் அடிபட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், படபிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இரு கதாநாயகர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டதால், படபிடிப்பை அவர்கள் இருவரும் உடல் நலம் தேறிய பின் வைத்துக் கொள்ள படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

அடுத்த மாதம், இருவரும் உடல் நிலை தேறி வந்த பின், படபிடிப்பைத் துவங்கலாம் என ராஜமவுலி கூறியிருப்பதால், படபிடிப்பு திட்டமிட்ட காலத்தைத் தாண்டி செல்லும் என கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதால், அதற்குள் படத்தை முடித்து விடலாம் என ராஜமவுலி கூறியிருக்கிறார். இருந்தாலும், படத்தின் இரு நாயகர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டதால், அபசகுணமாக இருப்பதாக நினைக்கிறாராம் இயக்குநர் ராஜமவுலி. இதற்காக, சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராணா அர்ப்பணிப்பு : சிலிர்த்த சாய் பல்லவிராணா அர்ப்பணிப்பு : சிலிர்த்த சாய் ... இஸ்லாம் முறைப்படி எளிமையாக நடந்த குறளரசன் திருமணம் இஸ்லாம் முறைப்படி எளிமையாக நடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in