Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் வேதா நாயகி மீது ஸ்ரீரெட்டி தாக்கு

26 ஏப், 2019 - 17:48 IST
எழுத்தின் அளவு:
Srireddy-slams-Shraddha-srinath

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள பிரபல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி சமீபகாலமாக சென்னையில் முகாமிட்டுள்ளார். முன்பை விட கொஞ்சம் அடக்கி வாசித்து வந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு பிரபலத்தின் மீது புதிது புதிதாக குற்றச்சாட்டை கூறிக் கொண்டேதான் இருக்கிறார்..

ஆண்கள் மட்டும் இல்லாமல் இப்போது பெண்கள் பக்கமும் தனது ஏவுகணை பார்வையை திருப்பியுள்ள ஸ்ரீரெட்டியின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார் விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது தெலுங்கில் நானி ஜோடியாக அவர் நடித்துள்ள 'ஜெர்சி' திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவரிடம் எந்த மொழியில் நடிக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா கேட்கப்பட்டதற்கு ஹிந்தியில் தொழிலில் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் என்றும், நடிகைகளை கவுரவமாக நடத்துகிறார்கள் என்றும் கூறினார்.

இது போதாதா நடிகை ஸ்ரீரெட்டிக்கு..? ஏற்கனவே நடிகர் நானி மீதும் குற்றச்சாட்டு சுமத்திய ஸ்ரீரெட்டி, “தற்போது தென்னிந்திய மொழிகளில் படுக்கை அறைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மறைமுகமாக சொல்லிவிட்டார் பார்த்தீர்களா..? தெலுங்கு படங்களில் தென்னிந்திய நடிகைகளை நடிக்க வைப்பதை விட்டுவிட்டு, எதற்காக கன்னடத்திலிருந்து நடிகையை அழைத்து வந்து நடிக்க வைக்கிறீர்கள்” என்றும் கேட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.. மேலும் ஷ்ரத்தாவின் மொழி குறித்தும் நடிப்பு குறித்தும் அவர் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தை சம்மதிக்க வையுங்கள் : நீது சந்திராஅஜித்தை சம்மதிக்க வையுங்கள் : நீது ... தர்பார் : கிரிக்கெட் விளையாடும் ரஜினி தர்பார் : கிரிக்கெட் விளையாடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

27 ஏப், 2019 - 11:02 Report Abuse
ஸாயிப்ரியா இவருககு வரும் வாய்ப்பையும் தன் வாயினால் அடுத்த வரை குறை கூறியே கெடுத்துக் கொள்கிறார். விரைவில் காணாமல் போய் விடுவார். குறை கூறவதையே தன் (சீப்) பப்ளிசிட்டி ஆக்கிக் கொள்கிறார் ஸ்ரீ ரெட்டி.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27 ஏப், 2019 - 07:24 Report Abuse
Mani . V வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டு விட்டு, பின்னர் பாதுகாப்பான இடத்துக்கு வந்தவுடன் பிறர் மீது குற்றம் சுமத்த வேண்டியது. ஸ்ரீரெட்டி போன்றவர்கள் ஒட்டு மொத்த பெண்கள் குலத்துக்கே களங்கமானவர்கள். இதெல்லாம் இருப்பதற்கு, இல்லாமல் இருப்பதே (சாவதே) மேல்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in