Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் ஓட்டளித்தது மீண்டும் சர்ச்சை

23 ஏப், 2019 - 15:11 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-vote-become-issue-again

தமிழ்நாட்டில் கடந்த வாரம் பார்லிமென்ட் தேர்தல் நடந்து முடிந்தது. அப்போது பல சினிமா பிரபலங்களும் வந்து ஓட்டளித்தனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, அதனால் அவர்களால் ஓட்டளிக்க முடியவில்லை என்று செய்திகள் வெளிவந்தன.

நடிகர் ரமேஷ் கண்ணா, தனக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என கோபமாக ஒரு வீடியோவை வெளியிட்டார். ரோபோ சங்கர் தன்னுடைய பெயரைத் தேடி வருவதாகவும் எப்படியும் ஓட்டளித்து விடுவேன் என்றும் கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயன் மதியத்திற்கு மேல் ஓட்டளித்தார் என்று செய்திகள் வெளிவந்தன. ஓட்டுச்சாவடியில் அவர் நின்ற புகைப்படமும், ஓட்டளித்த பின் கைவிரல் மை அடையாளத்துடன் அவர் டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படமும், அவர் ஓட்டளித்ததை உறுதிபடுத்துவதாக இருந்தன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவரை ஓட்டளிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் சட்டசபை தொகுதி பாகம் எண் 303, குட்ஷெப்பர்ட் பள்ளியில் ஓட்டளித்திருக்கிறார். வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் 703ம் வரிசை எண்ணில் நீக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய மனைவி பெயர் 704ம் வரிசை எண்ணில் உள்ளது.

பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தால், வாக்காளரின் கைரேகை மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பெற்றுக் கொண்டு வாக்களிக்க முடியுமாம்.

பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் வாக்களித்த பின், “வாக்களிப்பது உங்கள் உரிமை, உங்கள் உரிமைக்காகப் போராடுங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். இப்போது அவர் போராடி வாக்களித்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமாவை அதிர வைக்கும் 'அவெஞ்சர்ஸ்'தமிழ் சினிமாவை அதிர வைக்கும் ... சூர்யாவை விட பிசியாக ஜோதிகா சூர்யாவை விட பிசியாக ஜோதிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

sriram - Chennai,இந்தியா
24 ஏப், 2019 - 14:25 Report Abuse
sriram வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று இணய தளத்திலோ அல்லது 1950 என்ற எண்ணிற்கு தொலைபேசி அல்லது SMS மூலம் தொடர்பு கொண்டு சரி பார்பதை விட்டு 'பிலிம்' காட்டுகின்றனர்
Rate this:
Kannappan Ramanathan - Karaikudi,இந்தியா
24 ஏப், 2019 - 07:32 Report Abuse
Kannappan Ramanathan நாட்டுல இவன் ஓட்டு போடாததுதான் இப்ப பிரச்சனையா. போங்கடா போய் பிள்ளை குட்டி யா படிக்க vainkkadaa.
Rate this:
Sridaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23 ஏப், 2019 - 20:53 Report Abuse
Sridaran முதலில் வாக்காளர்களின் பெயரை நீக்கியவர்களுக்கு தண்டனை கொடுங்கள். சிவகார்த்திகேயனை அனுமதித்த அதிகாரி செய்தது சரிதான். ஆதார் கார்டு மூலம் ,கைரேகை சரி பார்த்து வாக்களிக்கும் முறையை கொண்டு வாருங்கள். கள்ள வோட்டை ஒழித்து விடலாம். முகவரி மாற்றினாலும் உடனே அப்டேட் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடும் பிரச்சனைக்கும் முடிவு கட்டலாம்
Rate this:
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23 ஏப், 2019 - 20:27 Report Abuse
Krishnamurthy Venkatesan வாக்குச்சாவடியில் ஒருவர் மனம் வெதும்பி சொன்ன சொல் இது. பல தேர்தல்களில் இதே வாக்கு சாவடியில் என் குடும்பத்தினருடன் (நான்கு ஓட்டுக்கள்) வந்து வாக்களித்துள்ளேன். இந்தமுறை எங்களிடம் தேர்தல் கமிஷன் அடையாள அட்டை (EPIC) இருந்தும் 17A பதிவில் பேர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை. கள்ள வோட்டு போடும் பலர் தெனாவட்டாக ஒட்டு போட முடிகிறது ஆனால் நேர்மையான வழியில் வோட்டு போட என்போன்ற பலரால் முடியவில்லை. அவமானம்தான் மிச்சம்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
23 ஏப், 2019 - 19:11 Report Abuse
sankar வாக்காளர் பட்டியலில் பெயர் சரி பார்த்து செய்ய வேண்டியது அவரவர் கடமை - அதை விட்டுவிட்டு - இது வெற்று விளம்பரம்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in