தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
36 வயதினிலே, பசங்க-2, மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களை தயாரித்த சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடைசியாக தயாரித்த படம் உறியடி-2.
2016-ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி வெற்றிபெற்ற உறியடி படத்தை இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த விஜயகுமாரே, உறியடி-2 படத்தையும் இயக்கி, கதாநாயகனாக நடித்தார். கடந்த வாரம் அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
உறியடி 2 படத்துக்கு மீடியாக்கள் பாராட்டித்தள்ள, மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் சுமாரான வெற்றியை தான் பெற்றுள்ளது.
நமது உரிமையை காக்க நாம் களத்தில் இறங்கி போராடணும், அரசியலில் நாம் தலையிடணும். இல்லை என்றால் அரசியல் நம் வாழ்க்கையில் தலையிடும் என்ற கருத்தை வலியுறுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது உறியடி 2.
இன்றைய அரசியல் சூழலை பிரதிபலிக்கும் காட்சிகள் பல இருந்ததால் படம் இன்னும் பெரிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால், அதை மக்களிடம் கொண்டு போய் சரியாக சேர்க்காததால், போதிய பப்ளிசிட்டி செய்யாததால் படம் சுமாரான வெற்றியை பெற்றதாக சொல்கின்றனர் விநியோகஸ்தர். இருப்பினும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு சுமாரான லாபம் கிடைத்திருப்பதாக தயாரிப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.