Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போனி கபூர் அழைப்பு, அஜித் என்ன முடிவெடுப்பார்?

15 ஏப், 2019 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Boneykapoor-call-:-What-decision-will-ajith-take.?

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கும் ஸ்டுடியோவுக்கு அண்மையில் விசிட் அடித்த போனிகபூர் படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறார்.

அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால், ''நேர்கொண்ட பார்வை' படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். அதில் அஜித்தின் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று டுவீட் பண்ணினார்.

அதோடு, மூன்று ஆக்ஷன் கதைகள் உள்ளன. அதில் ஒன்றுக்கு அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். விரைவில் ஹிந்தி படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்.'' என்றும் குறிப்பிட்டுள்ளார் போனிகபூர்.

'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கியிருக்கும் அஜித், போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ள மற்றுமொரு படத்தில் நடிக்க அதைவிட இன்னும் சற்று கூடுதலாக கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி படத்தில் அஜித் நடித்தால் இதைவிட பெரிய சம்பளம் கேட்பார் என்று சொல்லப்படுகிறது. அஜித் என்ன முடிவெடுப்பார் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காப்பான் படத்தில் மோகன்லாலுக்கு மோடி கெட்டப்காப்பான் படத்தில் மோகன்லாலுக்கு ... பூஜா ஹெக்டே வெளியிட்ட பிகினி போட்டோ பூஜா ஹெக்டே வெளியிட்ட பிகினி போட்டோ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in