Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

22 வயது கேமராமேன்

15 ஏப், 2019 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Cameraman-in-22-years

சமீபத்தில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கேமராமேன் கவின்ராஜ். தமிழ் சினிமாவின் இளம் கேமரமேன் இவர்தான். 19 வயதில் தீதும் நன்றும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார். 22 வயதில் ஒரு கமர்ஷியல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது பிசியான ஒளிப்பதிவாளராகியிருக்கிறார். அவர் கூறியதாவது:

தீதும் நன்றும் திரைப்படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த போது அதற்கு முன் சினிமா கேமராவை நான் தொட்டதே இல்லை. ஆனால் கேமரா சம்பந்தமான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் எனக்குத் தெரியும். இந்த பலவீனத்தை படக்குழுவிடம் சொல்லிவிட்டுத்தான் வேலையில் இறங்கினேன். அந்த வாய்ப்பை பயன்படுத்தினேன். அவர்களும் என் ஆர்வத்தை மதித்து என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார்கள். வெற்றிகரமாகச் செய்து முடித்தேன்.

அடுத்த படம்தான் இஸ்பேட் ராஜா இயக்குநர் ரஞ்சித் எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்த போது, சில நாட்கள் அவகாசம் கேட்டேன். அவரிடம் கதையும் கேட்டேன். அதில் நான் என் சார்ந்த என் தரப்பு பங்களிப்பு என்ன செய்ய முடியும் என்பதற்காக சில நாள் அவகாசம் கேட்டேன். சில தினங்களுக்குப் பிறகு என் தரப்பு எண்ணங்களைக் கூறினேன். அவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது.

நான் இந்தப் படத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையாகத்தான் பார்த்தேன். கேமராவை டிரை பேடில் போட்டு ஸ்டாண்டில் பொருத்தி காட்சிகளை எடுப்பதைப் பெரும்பாலும் தவிர்த்தேன். கையில் தூக்கிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு, நகர்ந்து கொண்டு, அசைந்து கொண்டு, ஊர்ந்து கொண்டு இருக்கும் படி தான் காட்சிகள் எடுத்தோம்.. அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என நினைத்தோம். இதை படம் முழுக்க பெரும்பாலான காட்சிகளில் செய்திருக்கிறேன்.

இன்று ஊடகங்கள் என் ஒளிப்பதிவைப் பாராட்டுகிறபோது நான் கதைப் போக்கிற்கு ஏற்ப கையாண்டுள்ள நிற மாற்றங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிற போது பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது என்கிறார் கவின் ராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழுக்கு வரும் பானு ஸ்ரீதமிழுக்கு வரும் பானு ஸ்ரீ ஆஸ்திரேலிய கிளியுடன் பழகும் யோகிபாபு ஆஸ்திரேலிய கிளியுடன் பழகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - bengalooru,இந்தியா
17 ஏப், 2019 - 04:43 Report Abuse
 nicolethomson அவ்வளவு சிறப்பாக இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in