Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஞானதேசிகன், இளையராஜா ஆனது எப்படி?

28 மார், 2019 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-How-Gnanathesikan-turn-as-Ilayaraja

இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75வது ஆண்டு இது. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்தவருக்கு தயாரிப்பாளர் சங்கம் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது. தற்போது கல்லூரிகள் அவரை அழைத்து கவுரவித்து வருகிறது. இளையராஜ அவரது இயற்பெயர் அல்ல. அவருக்கு இளையராஜா என்ற பெயர் எப்படி வந்தது. அதற்கான ஒரு சிறிய பிளாஷ் பேக்...

இளையராஜவுக்கு அவரது தந்தை, ஜாதகம், நாள், நட்சத்திரம் பார்த்து வைத்தது ஞானதேசிகன் என்ற பெயராகும். ஆனால் வீட்டில் அனைவரும் அவரை ராசய்யா என்று செல்லமாக அழைப்பார்கள். அவரை பள்ளியில் சேர்க்கும்போது அவரது தந்தை என்ன நினைத்தாரோ ராசய்யா என்ற பெயரை கொடுத்தார். அது முதல் ஞானதேசிகன் மறைந்து ராசய்யா ஆனார்.

பின்னர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது ராசா என்ற பெயரை பயன்படுத்தினார். அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றபோது அவர்தான் "உன் பெயர் ராசா என்பது பழசாக இருக்கிறது ராஜா என்று வைத்துக் கொள்" என்றார். அன்று முதல் ராஜா ஆனார்.

அன்னக்கிளி படத்திற்கு முன்பே இளையராஜா தனது நண்பர் கோவர்த்தனுடன் இணைந்து வரப்பிரசாதம் என்ற படத்திற்கு இசை அமைத்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி போல் அந்தப் படத்திற்கு ராஜா-கோவர்த்தன் என்று பெயர் கொடுத்திருந்தார்.

ஆனால் அன்னக்கிளி முதல் படம் ஆனது. அப்போது பஞ்சு அருணாசலம் "இசை என்று என்ன பெயர் போடட்டும்?" என்று கேட்டார். இதற்கு இளையராஜா "ராஜா-கோவர்த்தன் என்று போடுங்கள்" என்றார். அதற்கு பஞ்சு அருணாசலம் "நீ மட்டும்தான் அன்னக்கிளிக்கு இசை அமைத்திருக்கிறாய் பிறகு எதற்கு கோவர்த்தன் பெயரை சேர்க்க வேண்டும். ராஜா என்றே போடலாம். ஆனால் ஏற்கெனவே ஏ.எம்.ராஜா இருக்கிறார். அதனால் இனி உன் பெயர் இளையராஜா" என்றார். அதுவே நிலைத்து விட்டது. இந்த தகவல்களை சொன்னதும் இளையராஜா தான்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளிவருகிறது மலையாள அதிரன்தமிழில் வெளிவருகிறது மலையாள அதிரன் பாபி சிம்ஹா தந்த பொய்ப்புகார் ரத்து, கமிஷனர் நடவடிக்கை பாபி சிம்ஹா தந்த பொய்ப்புகார் ரத்து, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
29 மார், 2019 - 00:29 Report Abuse
KayD Daniel Raja nu oru perum irukae adha sollala ,,,, Was he born to Christian parents? Yes. Is (or was) he a Christian? No.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in