Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாபி சிம்ஹாவுக்கு வாய்ப்பு தரமாட்டோம் : தயாரிப்பாளர்கள் முடிவு

26 மார், 2019 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Producers-decides-to-avoid-Bobby-Simha

அக்னி தேவி என்ற படத்தில், "தான் ஐந்து நாட்கள் தான் நடித்தேன். பின்னர் அதில் தனக்குப் பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்தார்கள்" என தயாரிப்பாளர், இயக்குனர் மீது புகார் கூறி, வழக்குத் தொடர்ந்தார் அப்படத்தின் நாயகன் பாபி சிம்ஹா. படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என பொய்யான ஒரு தகவலைப் பரப்பி, அந்த படத்தின் திரையீட்டையும் கெடுத்தார், படம் வெளிவருவதை எப்படியாவது தடுக்கப் பார்த்தார் என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் பாபிசிம்ஹா போகவில்லை. மேலும், அந்த சங்கங்களைப் பற்றி அவர் தரக் குறைவாகப் பேசியதாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கடந்த சில நாட்களாக அவர்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். உடனடியாக பாபிசிம்ஹா விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, இனி அப்படி ஒரு விவகாரம் மீண்டும் வரக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று(மார்ச் 25) மாலை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்கள். ஒவ்வொரு தயாரிப்பாளரும், கோடிகளை கடனாகப் பெற்று, பல பிரச்சினைகளைச் சந்தித்து, படத்தை எடுத்து முடிக்கிறார்கள். பல தடைகளைத் தாண்டி தான் அவர்களால் படத்தையும் வெளியிட முடிகிறது. படம் தயாரிக்க முதலீடு செய்யும் முதலாளிகளான தயாரிப்பாளர்களிடம் இருந்தே நடிப்பதற்காக பல லட்சம், கோடி என சம்பளம் வாங்கிக் கொண்டு அந்தப் படத்தில் நடிப்பவர்களே படத்தை வெளியிடத் தடை வாங்க முயற்சிப்பது குறித்து பலரும் அவர்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அக்னி தேவி தயாரிப்பாளருக்கு, இயக்குனருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், கடும் நஷ்டம் ஆகியவை பாபி சிம்ஹாவால் தான் வந்தது என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். தயாரிப்பாளர்களின் கஷ்டம் என்ன என்று புரியாமல் வழக்கு, பொய்ப் புகார் என பாபி சிம்ஹா, தயாரிப்பாளர், இயக்குனரை அலைக்கழிக்க வைத்ததற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

சில அணிகளாகப் பிரிந்திருக்கும் தயாரிப்பாளர்கள் பலர் நேற்றைய கூட்டத்தில் ஒற்றுமையாகக் கலந்து கொண்டு, அவர்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் பல தயாரிப்பாளர்கள் இனி தங்களது படங்களில் பாபி சிம்ஹா நடிக்க வாய்ப்பு தர மாட்டோம், என உறுதிபடத் தெரிவித்துவிட்டார்களாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீடூ காட்சிகள் : ராதிகா - சின்மயி மோதல்மீடூ காட்சிகள் : ராதிகா - சின்மயி ... களவானி 2வில், 90எம்எல் ஓவியா இல்லை: இயக்குனர் உறுதி களவானி 2வில், 90எம்எல் ஓவியா இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Angry ஜெய் - Chennai,இந்தியா
26 மார், 2019 - 14:45 Report Abuse
Angry ஜெய் மணவாடு
Rate this:
Vijay - Chennai,இந்தியா
26 மார், 2019 - 18:23Report Abuse
Vijayகருவாடு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in