Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீனாட்சி கோயிலில் நிவேதா பெத்துராஜ் செய்த செயலால் சர்ச்சை

22 மார், 2019 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Nivetha-Pethuraj-use-cellphone-in-Meenakshi-Amman-Temple-becomes-controversy

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தடையை மீறி நடிகை நிவேதா பெத்துராஜ் அலைபேசியில் கோயில் முழுவதும் போஸ் கொடுத்த போட்டோக்களை முகநுாலில் பதிவிட்டது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கோயிலில் பாதுகாப்பு கருதியும், தரிசனம் செய்ய வந்த இடத்தில் செல்பி மோகத்தை தவிர்க்கவும் அலைபேசி கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் படங்களில் நடித்த மதுரையைச் சேர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ், நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்தார். அவரது உடைமைகளை சோதிக்காமல் கோயிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

இவர், கோயில் ஆங்காங்கே நின்று தனது அலைபேசியால் போட்டோ எடுத்தார். அதை தனது முகநுாலிலும் பதிவிட்டார். இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் முகநுாலில் பதிவிட்ட படங்களை நிவேதா அகற்றினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: கோயில் தீ விபத்து சம்பவத்துக்கு பின்பும், முன்பும் பாதுகாப்பு நடவடிக்கை கேள்விக்குறியாகி வருகிறது. பாதுகாப்பு பணியில் கோட்டை விடும் அறநிலையத்துறை கோயிலில் இருந்து உடனே வெளியேற வேண்டும். சாமானிய பக்தர்களிடம் கெடுபிடியை காட்டும் போலீசார் நடிகை விஷயத்தில் கெடுபிடியை காட்டாதது ஏன். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
அஞ்சலியின் புதிய தோற்றம்!அஞ்சலியின் புதிய தோற்றம்! கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப்பட வாரம் கொழும்பில் எம்.ஜி.ஆரின் திரைப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Babu Desikan - Bangalore,இந்தியா
26 மார், 2019 - 13:38 Report Abuse
Babu Desikan அதென்ன ஹிந்து அறநிலையத் துறை? அறநிலையத் துறை என்று எல்லா மதக் கோவில்களுக்கும் சட்ட திட்டங்கள் ஒரே மாதிரி செயல் பட வேண்டும். அல்லது அறநிலையத் துறை மூடப் பட வேண்டும். VIP என்றால் ஒரு நியாயம்..சாமானிய மக்களுக்கு வேறொரு நியாயமா?
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
25 மார், 2019 - 11:03 Report Abuse
R Sanjay பணம் செல்வாக்கு கூடவே அழகும் சேர்ந்துவிட்டால் விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கும். எப்போதும் கூறுவது தான் இங்கு இருக்கும் சட்டங்கள் மற்றும் தண்டனைகள் எல்லாமே சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்காக இயற்றப்பட்டதே ஒழிய அனைத்து மக்களுக்காகவும் அல்ல. உயர் வர்க்கம் என்ன நினைக்கிறது அவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும். இது நமது சாபக்கேடு. இதை மாற்ற மக்கள் புரட்சி ஒன்றே தீர்வு.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24 மார், 2019 - 15:02 Report Abuse
Endrum Indian 👌👌👌
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
24 மார், 2019 - 12:03 Report Abuse
madhavan rajan இவர்களெல்லாம் கடவுளைவிட அதிக ஆற்றல் படைத்த வி ஐ பி க்கள் என்று அங்கு பாதுகாப்பில் உள்ளவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24 மார், 2019 - 11:07 Report Abuse
Nallavan Nallavan அழகா செவப்பா இருக்காங்க ...... அதனால நிச்சயம் நல்லவங்களாத்தான் இருக்கணும் ......
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in