Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த 'பிக் பாஸ்' தொகுப்பாளர்கள் யார் ?

19 மார், 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Who-to-host-Biggboss-Season-3.?

தமிழ், தெலுங்கு டிவிக்களில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான ரியாலிட்டி நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. 2017ம் ஆண்டில் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினர். 2018ம் ஆண்டு இரண்டாவது சீசனில் தமிழில் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால், தெலுங்கில் ஜுனியர் என்டிஆருக்குப் பதிலாக நானி தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் முதல் சீசன் தமிழில் 2017 ஜுனிலும், தெலுங்கில் ஜுலையிலும், இரண்டாவது சீசன் தமிழில் 2018 ஜுனிலும், தெலுங்கில் ஜுனிலும் ஆரம்பித்தார்கள். அடுத்ததாக மூன்றாவது சீசனையும் இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதற்குள் தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம் பதிவியேற்றுவிடும். கமல்ஹாசன் பார்லிமென்ட் தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்றுவிட்டால் இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆனால், அவர் தேர்தலில் நிற்பாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

தெலுங்கைப் பொறுத்தவரையில் ஜுனியர் என்டிஆர், நானி இருவருமே மூன்றாவது சீசனைத் தொகுத்து வழங்க முடியதென்று சொல்லிவிட்டதால், அவர்களுக்குப் பதிலாக நாகார்ஜுனாவை சம்மதிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதற்காக அவருக்கு சம்பளமாக பெரிய தொகையைக் கொடுக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 3 பற்றி, தமிழ், தெலுங்கில் யார் தொகுத்து வழங்கப் போவது என்பது தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வட சென்னையில் விஜய்வட சென்னையில் விஜய் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Chris -  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2019 - 10:06 Report Abuse
Chris IF Kamal wins , then ok. no issue.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in